டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் புரயோஜனப்படாது. எனவே இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடை ஊதுகுழல், பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள் என ரஜினி வேதனை தெரிவித்தார்.

Recommended Video

    டெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும் எதிரானவர்களுக்கும் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வரும் மோதலில் இதுவரை 24 பேர் பலியாகிவிட்டனர். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த்தை என்ன பதில் சொல்ல போகிறார் என்று அரசியல் கட்சிகள் அவரை கேள்வி எழுப்பி வந்தன.

    இந்நிலையில் அரசியல் கட்சியினருக்கு பதில்அளிக்கும் வகையிலும் டெல்லி வன்முறை தொடர்பான செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதில் அளித்துள்ளார்.

     டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம் டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    இஸ்லாமிய சமூகம்

    இஸ்லாமிய சமூகம்

    இது தொடர்பாக ரஜினி அளித்த பேட்டியில், சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன். டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். இந்த விஷயத்தில் மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    கஷ்டமாகிடும்

    கஷ்டமாகிடும்

    டிரம்ப் வந்திருக்கும் போது அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். உளவுத்துறை அவர்களின் வேலையை சரியாக செய்யவில்லை. அதை வந்து முழுமையாக இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரத்தையாக இருப்பார்கள் என நம்புகிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மிகவும் வன்யைமாக கண்டிக்கிறேன். சிலபேர் சில கட்சிகள், சில மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.

    பாஜக ஆள் அல்ல

    பாஜக ஆள் அல்ல

    என்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது. அதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் புரயோஜனப்படாது என்பது என்னுடைய கருத்து. இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடை ஊதுகுழல், பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள். என்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது.

    தடுக்க வேண்டும்

    தடுக்க வேண்டும்

    டெல்லி வன்முறையில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை மத்திய மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே இதை கிள்ளி எறிய வேண்டும். முஸ்லீம்களுக்காக எப்போதும் துணை நிற்பேன். போராட்டங்களை அரசு ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவி விலகி சென்றுவிட வேண்டும். போராட்டங்கள் வன்முறை ஆகக்கூடாது. அமைதி வழியில் போராடலாம். ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது. அது என்னுடைய வேண்டுகோள்" இவ்வாறு கூறிய ரஜினி அதன்பிறகான கேள்விகளுக்கு கையை கூப்பிவிட்டு சென்றுவிட்டார்.

    English summary
    actor rajinikanth told, don't say like i am bjp man, i strongly condemns center over delhi violence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X