டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்பானியை தொடர்ந்து அதானியும் மனமாற்றம்.. முக்கிய அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு!

அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

Adani decides to withdraw all the cases against The Wire

அதன் ஒரு கட்டமாக நேற்று ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடுத்த அவதூறு வழக்கை அனில் அம்பானி திரும்பப் பெற்றார். 5000 கோடி ரூபாய் கேட்டு அவர் தொடுத்த வழக்கை அவர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

பொதுவாக கடந்த இரண்டு வருடங்களாக காங்கிரஸ் கட்சியும் ரிலையன்ஸ் குழும தலைவர் ஆனால் அம்பானியும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தனர். இந்த நிலையில் ரபேல் வழக்கில் அனில் அம்பானியை ராகுல் காந்தி நேரிடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதற்கு எதிராக அம்பானி தொடுத்த அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது அதானி குழுமத்தின் தலைவர் அதானி ''தி வயர்'' செய்தி நிறுவனம் மீது தொடுத்து இருந்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

''தி வயர்'' செய்தி நிறுவனம் செய்தி நிறுவனம் பாஜக குறித்தும், குஜராத் அரசு குறித்தும், அதானி நிறுவனம் மோசடி செய்தது என்றும் குற்றச்சாட்டு வைத்து நிறைய கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இதற்கு எதிராக அதானி அவதூறு வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் அனைத்து விதமான அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தற்போது அதானி அறிவித்து உள்ளார். இது பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அனில் அம்பானி, அதானி இருவரும் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

English summary
Adani decides to withdraw all the cases against The Wire after Anil Ambani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X