டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்மலாவை நிர்பலா என அழைத்த காங். தலைவர்.. வருத்தம் தெரிவித்தார் ஆதிர் ரஞ்சன்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நிர்பலா என கூறிய மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் நேற்று முன் தினம் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.

Adhir Ranjan expresses regret about his Nirbala remark in Loksabha

அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பலவீனமாகிவிட்டார். அவர் இனிமேல் நிர்பலா சீதாராமன் என்று கூறினார். இந்த நிலையில் இந்த கருத்துக்கு சவுத்ரி நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.

மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க முற்பட்டார். அப்போது சவுத்ரி குறுக்கிட்டார். அவர் பேசுகையில் எனது கருத்து நிதி அமைச்சரை காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் எனக்கு சகோதரி போன்றவர். என்னை அவருடைய சகோதரனாகவே கருதுகிறேன் என்றார். அப்போது நிர்மலா சீதாராமன் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தனது பதிலுரையில் நான் இன்னும் நிர்மலா மற்றும் சப்லா (அதிகாரம் உடையவள்) என்றார்.

English summary
Congress Leader Adhir Ranjan Chowdhury apologises for nirbala on Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X