டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில்.. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட அத்வானிக்கு இடமில்லாமல் போச்சே!

பாஜக தேர்தல் அறிக்கையில் மூத்த தலைவர் அத்வானி ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள இரட்டையர்களான மோடியும், அமித்ஷாவும் அத்வானியை இதில் கூட ஒதுக்கி வைத்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!

மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் வாஜ்பாயின் வழிகாட்டலால் உருவாக்கப்பட்டது பாஜக! ஜனசங்கமாக வலம் வந்ததை பாஜகவாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் இவர்கள்தான். அதை விட முக்கியமாக, பாஜக இந்தியா முழுவதும் படு வேகமாக வளர அத்வானிதான் மிக மிக முக்கியக் காரணம்.

ஆனால் காலப் போக்கில் வாஜ்பாய் உடல் நலம் குன்றி அரசியலை விட்டு விலகினார். கடைசியில் மறைந்தும் போனார். தற்போது மோடி தலைமையிலான பாஜக அத்வானியை ஓரம் கட்டி ஒதுக்கி விட்டது. வாஜ்பாய் பல வருடமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர் என்றாலும், அத்வானியையும் சேர்த்து புறக்கணித்தது பாஜக தலைமை. இதனுடன் முரளி மனோகர் ஜோஷியும் அடக்கம்.

கல்விக்கடன் பற்றி பேச மாட்டோம்.. நீட் குறித்து வாய் திறக்க மாட்டோம்.. கல்வியை கண்டுகொள்ளாத பாஜக! கல்விக்கடன் பற்றி பேச மாட்டோம்.. நீட் குறித்து வாய் திறக்க மாட்டோம்.. கல்வியை கண்டுகொள்ளாத பாஜக!

மிஸ்ஸிங்!

மிஸ்ஸிங்!

மோடி ஆட்சிக்கு வந்த இந்த 5 ஆண்டிலும் அத்வானியும், ஜோஷியும் பல்வேறு நிலைகளில் ஒதுக்கப்பட்டனர்.. ஓரங்கட்டப்பட்டனர்... வெறும் வயதை காரணம் காட்டி இந்த தேர்தலிலும் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டனர். அதேபோல 40 பேர் கொண்ட நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலிலும் இவர்கள் இருவரும் மிஸ்ஸிங்.

ராகுல் கண்டனம்

ராகுல் கண்டனம்

இதுதான் குருவுக்கு செலுத்தும் மரியாதையா, இதுதான் இந்து மதம் போதிக்கிறதா என்று ராகுல்காந்தி கூட சீறினார். மற்றொரு பக்கம் பாஜகவின் பலன்களை அமித்ஷாவும் மோடியும் அனுபவித்து வருகிறார்கள் என்று சிவசேனா எகிறியது!

படம் இல்லை

படம் இல்லை

இப்போது இன்னொரு சம்பவத்தையும் பாஜக அரங்கேற்றி உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது பாஜக. அதில் மூத்த தலைவரான அத்வானி படம் கூட இடம் பெறவில்லை. எந்த இடத்திலும் அவரைக் காணோம்.. சின்ன ஸ்டாம்ப் சைஸ் படம் கூட இல்லை.

3 பேர் படம்

3 பேர் படம்

பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. அதைத் தவிர ஷாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் மறைந்த தலைவர்கள் என்ற அடிப்படையில் இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் ஷாமா பிரசாத் படத்திற்குக் கீழே தேசியவாதம் என்றும், தீனதயாள் படத்தின் கீழே அந்தியோதயா என்றும், வாஜ்பாய் படத்தின் கீழே நல்லாட்சி என்றும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

அத்வானி படம்

அத்வானி படம்

என்னதான் இருந்தாலும் அத்வானி ஒரு மூத்த தலைவர், பாஜகவின் நிறுவனத் தலைவர். பாஜக இந்த அளவுக்கு வளர அவர்தான் முக்கியக் காரணம். இன்று இவர்கள் இவர்கள் தூக்கிப் பிடிக்கும் ராமர் கோவில் கோஷத்தை முன்வைத்து முதலில் அரசியல் லாபத்தை பாஜகவுக்கு சம்பாதித்துக் கொடுத்தவர் அத்வானிதான். அந்த காரணத்திற்காவாவது அத்வானி படத்தையும் போட்டிருக்கலாம். ஆக மொத்தம்... மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என்பதை மேலும் அப்பட்டமாக தெரிய வைத்து விட்டார்கள் இந்த பாஜகவினர்

English summary
BJP Senior Leader Advani is missing in Manifesto back cover. This is further proof that PM Modi and Amit Shah have no respect for senior leaders,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X