டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்வானியின் ஆவேச கருத்து.. ஓடி வந்து உடனே பதில் சொன்ன நரேந்திர மோடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதிய அத்வானி bjp leader advani released important statement

    டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ள சர்ச்சை கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விடையளித்துள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சியை அத்வானியுடன் இணைந்து முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஆரம்பித்தார்.

    எனவே, பாஜக நிறுவப்பட்ட தினம் ஏப்ரல் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டிி பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கடிதம் எழுதியுள்ளார்.

    பன்முகத்தன்மை

    பன்முகத்தன்மை

    மேலும், அத்வானி, தனது பிளாக்ஸ்பாட்டில், ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதை பாருங்கள்: அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை ஒருபோதும் பாஜக தேசவிரோதிகளாக எண்ணியதில்லை. பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு மரியாதை அளிப்பதே இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம் ஆகும். ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி, அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை எதிரிகளாக கருதியது இல்லை. ஆனால் அவர்களை நாங்கள் ஆலோசனை கூறுபவர்களாகவே கருதுகிறோம்.

    பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

    தேச விரோதிகள் இல்லை

    தேச விரோதிகள் இல்லை

    இதேபோல் அரசியல் ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவர்களை நாங்கள் ஒரு போதும் தேச விரோதிகளாக கருதியது இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட முறையில் விரும்பும் அரசியலை தேர்வு செய்வதற்கு பாரதிய ஜனதா ஆரம்பத்தில் இருந்தே உறுதி அளித்துள்ளது. கட்சிக்குள்ளும் மற்றும் தேசிய அளவிலும் ஜனநாயகத்தையும் ஜனநாயக மரபுகளையும் பாதுகாப்பது தான் பாஜகவின் பெருமைமிக்க அடையாளமாக உள்ளது.

    ரொம்ப கோபம்.. காங்கிரசின் முடிவால் கடுப்பான குஷ்பு.. இதுதான் காரணம்- வீடியோ

    அத்வானிக்கு வாய்ப்பு இல்லை

    அத்வானிக்கு வாய்ப்பு இல்லை

    தேர்தலோ ஜனநாயகத்தின் உண்மையான பண்டிகையாகும். இதுவே மக்களின் நேர்மையான சிந்தனைக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம் ஆகும். இவ்வாறு அத்வானி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பாஜக நிறுவனர்களில் ஒருவர் என்பதோடு, 6 முறை காந்தி நகரில் வென்ற அத்வானிக்கு இந்த முறை லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்கப்படவில்லை. அந்த தொகுதியில் தான் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

    நரேந்திர மோடி

    இந்த நிலையில், அத்வானி கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று இரவே அவசரமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில் அவர் கூறுகையில், பாஜகவின் உண்மை கொள்கையைத்தான் அத்வானி பிரதிபலித்துள்ளார். தேசம் முதலில், கட்சி இரண்டாவது, தனிமனித நலம் கடைசியில்தான். பாஜகவின் தொண்டராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். எல்.கே.அத்வானி போன்ற சிறந்த தலைவர்களால் கட்சி வலுப்பெற்றதை நினைத்து பெருமையடைகிறேன். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம், அத்வானி கோபத்தில் இருக்கிறார் என்று பரவிய செய்திகளுக்கு அணைபோட முயன்றுள்ளார் மோடி.

    English summary
    "Advani Ji perfectly sums up the true essence of BJP, most notably the guiding Mantra of ‘Nation First, Party Next, Self Last.’ Proud to be a BJP Karyakarta and proud that greats like LK Advani Ji have strengthened it", says Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X