டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொடர் குண்டுவெடிப்பு: இந்தியர்கள் தேவையின்றி இலங்கை பயணத்தை தவிர்க்கவும்- இந்தியா

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் ராணுவம் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் பறிமுதல்- வீடியோ

    டெல்லி: தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இந்தியர்கள் தேவையின்றி இலங்கை பயணத்தை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய 8 இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 360 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    Advisory for Indian Nationals travelling to Sri Lanka

    நாடு முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இலங்கைக்கு பயணம் செய்வதை பாதிப்பதாக உள்ளது.

     நெஞ்சை பிழிய வைத்த மனிதவெடிகுண்டாக வெடித்தவரின் பிஞ்சு மகளின் 'வாப்பா' குரல்! நெஞ்சை பிழிய வைத்த மனிதவெடிகுண்டாக வெடித்தவரின் பிஞ்சு மகளின் 'வாப்பா' குரல்!

    எனவே தற்போது அங்கு நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காகவும் அவசரம் கருதியும் பயணம் செய்யும் இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், கண்டியில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் ஹம்பன்தோட்டா, யாழ்ப்பாணம் ஆகிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    In view of the prevailing security situation in Sri Lanka in the aftermath of terror attacks on 21 April 2019, Indian nationals intending to travel to Sri Lanka are advised not to undertake non-essential travel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X