டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2ஜியில் குற்றஞ்சாட்டப்பட்ட அதே தொகை.. ரூ. 1.70 லட்சம் கோடி என்ன ஆனது.. மத்திய அரசு மீது புகார்!

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூபாய் 1.70 லட்சம் கோடி வழங்கியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வெளியாகும் பரபரப்பு குற்றச்சாட்டு

    டெல்லி: மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூபாய் 1.70 லட்சம் கோடி வழங்கியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதனால் இணையத்தில் 2ஜி வழக்கும் மீண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் பல மாத கோரிக்கைக்கு பின் நேற்று இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.

    ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடுமையான புகார்களை வைக்க தொடங்கி உள்ளது.

    மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்! மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்!

    என்ன கேள்விகள்

    என்ன கேள்விகள்

    இந்த நிலையில் புதிய திருப்பமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்தும் இந்த நிதி பல கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த 2018 - 19ம் ஆண்டில் அரசின் வருவாய் ₹17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் ₹15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது.

    என்ன குறைபாடு

    என்ன குறைபாடு

    இதனால் 1.7 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்று அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. பட்ஜெட்டில் ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யத்தான் தற்போது பாஜக அரசு ஆர்பிஐயிடம் கடன் வாங்குகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் வைத்துள்ளது.

    என்ன குற்றம்

    என்ன குற்றம்

    அதன்படி பாஜக கட்சி 1.70 லட்சம் கோடி ரூபாயை முறைகேடு செய்துவிட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்று தற்போது ஆர்பிஐ மூலம் பணம் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு சமம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என்ன நினைவு

    என்ன நினைவு

    இந்த தொகையை கேட்டதும் பலருக்கும் 2ஜி வழக்குதான் நினைவிற்கு வந்து இருக்கும். 2ஜி வழக்கிலும் இதே 1.70 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்தது என்றுதான் புகார் வைக்கப்பட்டது. அந்த புகார்தான் 2014ல் பாஜக கட்சி வெற்றிபெற கூட முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

    2ஜி வழக்கு

    2ஜி வழக்கு

    ஆனால் கடைசியில் 2ஜி ஊழலே நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஊழல் நடந்தது என்பதற்கான சின்ன ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பு சமர்பிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தற்போது அதே தொகை கொண்ட வேறு ஒரு பிரச்சனை செய்திகளை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது.

    இடமாற்றம்

    இடமாற்றம்

    ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது மத்திய பாஜக அரசு. அதேபோல் தற்போது 1.70 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்க தொடங்கி உள்ளது. இதை காங்கிரஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகிறது.

    English summary
    After 2G case, the RS. 1.70 Lakh Cr figure against occupies media after RBI rollout yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X