• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடுத்த மாதம் மீண்டும் தொடங்கும் வேக்சின் ஏற்றுமதி..திடீர் அனுமதி ஏன்?மன்சுக் மாண்டவியா புது விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படும் என மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சில நாடுகள் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஆனால், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதால், கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது சிக்கலான ஒன்றாகவே உள்ளது.

தலைநகர் சென்னை சூப்பர் சாதனை..! மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின்தலைநகர் சென்னை சூப்பர் சாதனை..! மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின் பணிகள்

கொரோனா வேக்சின் பணிகள்

அதேநேரம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போதைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. உலகின் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் பூஸ்டர் டோஸ் வேக்சின் போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் வேக்சின் பணிகள் முதலில் மந்தமாகத் தொடங்கிய போதிலும், விரைவில் அது வேகம் பெற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் வேக்சின் பணிகள்

இந்தியாவில் வேக்சின் பணிகள்

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் 18+ அனைவருக்கும் வேக்சின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா வேக்சின் உற்பத்தி இல்லை.

2ஆம் அலை

2ஆம் அலை

குறிப்பாக. 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் கொரோனா வேக்சின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களிலும் வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் வேக்சின் இல்லாததால், பொதுமக்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மேலும், கோவிஷீல்டு வேக்சின் டோஸ் கால இடைவெளி 4-6 வாரங்களில் இருந்து பின்னர் 8 முதல் 12 வாரங்களாகவும், அதன் பின்னர் 12 முதல் 16 வாரங்களாகவும் நீட்டிக்கப்பட்டதற்கு வேக்சின் பற்றாக்குறையே காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

ஏற்றுமதி தடை

ஏற்றுமதி தடை

முன்னதாக இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியா அன்பளிப்பாக வேக்சினை்களை அளித்தது. அதேபோல தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வணிக ரீதியிலும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் 2ஆம் அலை ஏற்பட்டு வேக்சின் பற்றாக்குறை மோசமாக இருந்தது. இந்தியர்களுக்கு முதலில் வேக்சின் அளிக்காமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமித செய்வது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போது வேக்சின் ஏற்றுமதி மற்றும் அன்பளிப்பாக வழங்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

தடுப்பூசி பணிகள் தீவிரம்

தடுப்பூசி பணிகள் தீவிரம்

மேலும், கொரோனா வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாகக் கடந்த செப். 17ஆம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாளில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேக்சின் போடப்பட்டது. தற்போது வேக்சின் உற்பத்தியில் இருந்து சிக்கல்களும் நீங்கியுள்ளதால், தடுப்பூசி போடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஏற்றுமதி

மீண்டும் ஏற்றுமதி

இந்தச் சூழலில் அடுத்த மாதம் முதல் கொரோனா வேக்சின்களை அன்பளிப்பாக வழங்குவதும் ஏற்றுமதியும் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நாளை (செப். 21) அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த குவாட் மாநாட்டில் தடுப்பூசிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இந்த புதுப்பிக்கப்பட்ட ஏற்றுமதி முறை 'தடுப்பூசி மைத்திரி' என அழைக்கப்படும். உலகளாவிய தடுப்பூசி பகிர்வு தளமான கோவாக்ஸ் திட்டத்திற்கு இது உதவும். மேலும் அண்டை நாடுகளுக்கு இதன் மூலம் நம்மால் முன்னுரிமை அளிக்க முடியும். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்தியாவில் வேக்சின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் முதல் 30 கோடி வேகே்சின்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பயாலஜிக்கல் இ போன்ற நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 100 கோடி வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

 புது விளக்கம்

புது விளக்கம்

மற்ற நாடுகளுக்கு கொரோனா வேக்சின் போதியளவு கிடைப்பதை உறுதி செய்ய கோவாக்ஸ் திட்டத்திற்கு வேக்சின் அளிப்போம். அதேநேரம் முதலில் அண்டை நாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேநேரம் இந்தியர்களின் தேவை போக அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார். தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்யும் முன் இந்தியா 100 நாடுகளுக்கு சுமார் 6.6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
India will resume the export and donations of excess vaccines next month. Total production could top 100 crore in the last three months of the year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X