டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து - வீடியோ

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த மே மாதம் முதலே நாடு முழுவதிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

    இதனால் ஸ்டேடியங்கள், கல்லூரிகள், வர்த்தக மையங்கள், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பெரிய பரபரப்பளவு கொண்ட இடங்கள் கொரோனா தனிமை மையங்களாக மாற்றப்படுகின்றன.

    ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து... 7 பேர் பலிஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து... 7 பேர் பலி

    குஜராத்தில்

    குஜராத்தில்

    அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான உடல்நிலை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். லேசான பாதிப்பு உள்ளவர்கள் மேற்கண்ட தனிமை மையங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதற்காக மூடிக்கிடக்கும் நட்சத்திர ஹோட்டல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரு தீவிபத்து ஏற்பட்டது.

    8 பேர் பலி

    8 பேர் பலி

    அதாவது அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 6-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்றதொரு சம்பவம் தற்போது விஜயவாடாவிலும் நடந்துள்ளது.

    சொர்ணா பேலஸ்

    சொர்ணா பேலஸ்

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொர்ணா பேலஸ் என்ற ஹோட்டல் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 50 க்கும் மேற்பட்ட நோயாளிகளும், மருத்துவர்களும, செவிலியர்களும், இதர தொழிலாளர்களும் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இங்கு தீவிபத்து ஏற்பட்டது.

    பலி எண்ணிக்கை உயரக் கூடும்

    பலி எண்ணிக்கை உயரக் கூடும்

    இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடிச் சென்று தப்ப முயன்றனர். அப்போது மாடியிலிருந்தும் சிலர் குதித்தனர். எனினும் தீயில் கருகி இதுவரை மொத்தம் 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீவிபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிறது. குஜராத்தில் தனியார் மருத்துவமனையிலும், ஆந்திராவில் தனிமை மையத்திலும் நடந்துள்ள இந்த விபத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    English summary
    After Ahmedabad, Andhra Hotel which acts as Covid 19 facility centre witnesses fire accident today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X