டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி வழக்கு முடிந்தது.. அடுத்தது சபரிமலை ஐயப்பன் கோவில் !

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கு முடிந்தது.. அடுத்தது சபரிமலை ஐயப்பன் கோவில் !

    டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் அமர்வு அடுத்ததாக சபரிமலை உள்பட இன்னும் சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17ம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதித்து தீர்ப்பளித்து.

    இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வெள்ளிக்கிழமைக்குள் எப்போது வேண்டும் என்றாலும் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லைஎச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை

    சபரிமலை கோயில்

    சபரிமலை கோயில்

    அயோத்தியைப் போலவே சபரிமலை பிரச்சனையில் பாஜக முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து பாஜக பல்வேறு போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. சபரிமலை கடந்த ஆண்டு ஐயப்ப சாமி சீசனில் கடும் போராட்ட களமாக இருந்தது.

    அய்யப்பன் சுவாமி

    அய்யப்பன் சுவாமி

    சபரிமலை கோவிலில் சிவன் மற்றும் மோகினி (விஷ்ணுவின் அவதாரம்) ஆகியோரின் மகனாகக் கருதப்படும் அய்யப்பன் சுவாமி உள்ளார். அய்யப்பன் சுவாமியின் பிரம்மச்சாரியம் காரணமாக மாதவிடாய் நின்ற பெண்களை கோவிலின் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்பது பல ஆண்டுகளாக நம்பிக்கை ஆகும்.

    பெண்களுக்கு தடை

    பெண்களுக்கு தடை

    இந்த நம்பிக்கைக்கு 1991 ல் கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைவதைத் தடைசெய்ததால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது.

    தடைக்கு எதிர்ப்பு

    தடைக்கு எதிர்ப்பு

    இந்நிலையில் இதை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வழக்கறிஞர்கள், பெண்களுக்கு சபரிமலையில் விதித்த தடையை எதிர்த்து 2006 இல் வழக்குத் தாக்கல் செய்தனர். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளையும் சாரத்தையும் மீறுவதாக தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    இதையடுதது உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2018 இல், 1991 உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்ப்பை மாற்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதி அளித்தது.

    பெண்கள் அனுமதி

    பெண்கள் அனுமதி

    இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக, பெண்களை நுழைய விடாமல் சபரிமலையில் பல்வேறு போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தியது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்னும் சில நாட்களில் தீர்ப்பு அளிக்க உள்ளது. சபரிமலை சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    English summary
    After Ayodhya, Chief Justice Ranjan Gogoi has four more important judgments to pronounce, including on Sabarimala before he steps down on November 17.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X