கொரோனா பாதித்த சோனியா காந்திக்கு என்னாச்சு? உடல்நிலை குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் வீட்டில் தனிமையில் இருந்தார்.
அதன்பிறகு அவர் டெல்லியில் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாராள கட்சி நிதி...சோனியா, ராகுலை மிஞ்சிய பெருந்தலைகள்...அம்பலப்படுத்திய தேர்தல் கமிஷன்

சோனியா காந்திக்கு என்னாச்சு?
இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்த விபரங்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான ஜெய்ராம்ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபத்திய கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 12ம் தேதி மதியம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாசக்குழாயில் பூஞ்சை
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சுவாசக்குழாயில் அவருக்கு பூஞ்சை தாக்குதல் உள்ளது. இதற்கான சிகிச்சைகள் தொடர்கிறது. மேலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்கும் தொடர் கண்காணிப்புடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு
நேஷனல் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்க பிரிவினர் சம்மன் வழங்கி இருந்தனர். இந்நிலையில் தான் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு விசாரணையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13ம் தேதி முதல் ராகுல்காந்தி தொடர்ந்து 3 நாட்கள் அமலாக்கபிரிவு விசாரணைக்கு ஆஜரானார்.

ராகுலுக்கு 3 நாள் அனுமதி
நேற்று அவருக்கு ரெஸ்ட் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆஜராக அமலாக்க பிரிவினர் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் சோனியா காந்தியின் உடல் நலனை காரணம் காட்டி அவர் அமலாக்கத்துறை பிரிவு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். அதில் சோனியா காந்தியின் உடல்நலனை குறிப்பிட்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதனால் மறுவிசாரணைக்கு ராகுல்காந்தி ஜூன் 20ல் ஆஜராக உள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.