டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்.14ல் புல்வாமா.. பிப்.26ல் பாலகோட்.. 12 நாட்களில் படிப்படியாக காய் நகர்த்தல்.. சக்தே இந்தியா

Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கிய ரபேல் குடும்பத்தை சேர்ந்த மிராஜ் 2000- வீடியோ

    டெல்லி:பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா தற்போது பாகிஸ்தானில் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் கடந்த 12 நாட்களில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.

    புல்வாமா தாக்குதலை பதிலாக என்று சொல்வதை விட.. பாகிஸ்தான் மீதான முதல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்திய விமானப்படையின் தாக்குதலை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. தொடர்ந்து.... இது போன்ற விவகாரங்களில் பழி சொல்லி தப்பித்து கொள்ளும் பாகிஸ்தான் இந்தியாவின் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    கடந்த 14-ம் தேதி நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக படிப்படியாக இந்தியா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளினால் இன்று இந்திய விமானப் படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 14ம் தேதிக்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது பார்க்கலாம்..

    பிப்ரவரி 15

    பிப்ரவரி 15

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமான இந்திய விமானப் படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று அதன் தலைவர் மார்ஷல் பிரேந்தர் சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியது.

    பிப்ரவரி 16 - 20

    பிப்ரவரி 16 - 20

    இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடங்கின. ரகசிய ட்ரோன் விமானங்களை கொண்டு எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வந்தன.

    பிப்ரவரி 20-22

    பிப்ரவரி 20-22

    இந்திய உளவுத்துறை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகின. தாக்குதல் நடத்த எந்த பகுதிகள் சாத்தியமானவை என்பது குறித்த... இலக்கு அட்டவணைகளை தயாரித்தன.

    பிப்ரவரி 22

    பிப்ரவரி 22

    இந்திய விமானப் படையின் படைப்பிரிவு 1 ‘டைகரஸ்' (Tigers) மற்றும் 7வது படைப்பிரிவான பேட்டில் ஆக்ஸஸ் (Battle Axes) ஆகியவை தாக்குதலுக்காக தயார்படுத்தப்பட்டன. 12 மிராஜ் 2000 ஜெட்களும் தயார் நிலையில் இருந்தன.

    பிப்ரவரி 24

    பிப்ரவரி 24

    அதன்பிறகு... தாக்குதல் எப்படி நடத்துவது என்பது பேசப்பட்டது.பின்னர் மத்திய இந்தியா பகுதியில் சோதனை தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிப்ரவரி 25-26

    பிப்ரவரி 25-26

    12 மிராஜ் 2000 வகை விமானங்கள் குவாலியரிலிருந்து லேசர் குண்டுகளுடன் பாகிஸ்தான் புறப்பட்டன. பிறகு ரகசிய ட்ரோன் விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டன. பின்னர் முசாபர்பாத் எல்லைப் பகுதியில் விமானங்கள் பறந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில், இன்று அதிகாலை 3.20 - 3.30 மணிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    English summary
    India has entered Pakistan and destroyed terrorist camps. India's actions in the last 12 days have created a surprise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X