டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 370வது பிரிவு... திரிபுராவில் ஆடு, கோழி தடை... டென்ஷனில் எல்லை பிரதேசங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரை தொடர்ந்து திரிபுராவிலும் பதற்றம்

    டெல்லி: 70 ஆண்டுகளாக இந்தியாவுடன் இணைந்து சில சிறப்பு உரிமைகளுடன் மாநிலங்களாக இருந்த பிரதேசங்கள் ஒவ்வொன்றாக கலகக் குரல்களை எழுப்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    நாடு விடுதலை அடைந்த போது ஜம்மு காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்தது. ஆனால் 1947-ல் பாகிஸ்தான், பழங்குடியினரை ஏவிவிட்டு காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதையடுத்து காஷ்மீர் மகாராஜா ஹரிசிங், இந்தியாவுடன் இணைய ஒப்புதல் தெரிவித்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் ஏற்பட்டது.

    அப்போது காஷ்மீருக்கு சில உறுதிமொழிகளை இந்தியா அளித்தது. காஷ்மீருக்கு பிரதமர் பதவி என தனியே இருக்கும்; காஷ்மீர் எதிர்காலம் குறித்து அம்மாநில மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது என்பது உள்ளிட்டவை அந்த வாக்குறுதிகள்.

    ஆடு, கோழி பலியிட தடையா? இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா? திரிபுரா கொந்தளிப்புஆடு, கோழி பலியிட தடையா? இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா? திரிபுரா கொந்தளிப்பு

    சிறப்பு அந்தஸ்து நீக்கம்

    சிறப்பு அந்தஸ்து நீக்கம்

    ஆனால் காலம் செல்ல செல்ல அத்தனையும் கீழானது. கடைசியாக அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மட்டும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு சாட்சியமாக இருந்தது. அங்கு வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை என்பது உள்ளிட்ட அம்சங்களை அது உறுதி செய்தது. தற்போதைய மத்திய அரசு, இந்த 370வது சரத்தையும் நீக்கியதுடன் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து தமது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. இது ஜம்மு காஷ்மீரில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இப்போது சர்வதேச அளவில் பேசப்படுகிற விவகாரமாகி இருக்கிறது.

    திரிபுரா இணைப்பு

    திரிபுரா இணைப்பு

    இந்நிலையில் வடகிழக்கில் திரிபுராவில் காஷ்மீரைப் போல ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. 1949-ம் ஆண்டுதான் திரிபுரா இந்தியாவுடன் இணைந்தது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் திரிபுராவில் 14 கோவில்களுக்கு ஆடு கோழி பலியிடுதல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு அரசு உதவும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

    உயர்நீதிமன்றம் தடை

    உயர்நீதிமன்றம் தடை

    இந்த சரத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம், இந்து கோவில்களில் ஆடு கோழி பலியிட கூடாது; இதற்கு அரசு உதவியும் செய்யக் கூடாது என தடை விதித்திருக்கிறது. இத்தனைக்கும் இந்தியா- திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் குறித்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்றத்தில் வாதிட்டது.

    இந்தியாவின் உறுதி மொழி என்னாச்சு?

    இந்தியாவின் உறுதி மொழி என்னாச்சு?

    ஆனாலும் உயர்நீதிமன்றம் இதை நிராகரித்து தடை விதித்திருக்கிறது. இதனால் இந்தியா- திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தின் சரத்துகளை முன்வைத்துதான் உச்சநீதிமன்றம் போகப் போகிறதாம் அம்மாநில அரசு.

    வடக்கேயும் பஞ்சாயத்து..வடகிழக்கேயும் டென்ஷன்!

    English summary
    After abrogation of article 370 in Jammu Kashmir now Tripura state also faces animal sacrifice issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X