டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை

    டெல்லி: பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, ராணுவ விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்பட உள்ளார்.

    கடந்த 27-ம் தேதி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்ற அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிறை பிடித்தது. அங்கு அவர் சற்றும் அஞ்சாமல் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் காட்டிய தைரியம் இந்தியர்களை பெருமையடையச் செய்தது.

    அதன்பின்னர் உலக நாடுகள் வலியுறுத்தல், இந்தியாவின் அழுத்தம் உள்ளிடட காரணங்களால் பஞ்சாபின் வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியா வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அதனை நாடே கொண்டாடி மகிழ்ந்தது.

    ராணுவ விதிமுறைகள்

    ராணுவ விதிமுறைகள்

    இதையடுத்து டெல்லி அழைத்து வரப்பட்ட அவருக்கு ராணுவ விதிமுறைகளின் படி சில கட்டாய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ராணுவ மருத்துவமனையில் இந்த சோதனை நடைபெற்றது.

    என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன் என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன்

    குடும்பத்தினருடன் சந்திப்பு

    குடும்பத்தினருடன் சந்திப்பு

    பின்னர் விமானப்படைக்குச் சொந்தமாக டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தமது குடும்பத்தினரைச் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய உளவுத்துறை உள்ளிட்ட பல அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

    அபிநந்தன் தைரியம்

    அபிநந்தன் தைரியம்

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:பாகிஸ்தானில் காட்டிய தைரியத்தால்அபிநந்தன் இந்தியர்களால் மிகவும் மதிக்கப்படுபவராக உள்ளார். எனினும், நம் எதிரி நாட்டின் போர் கைதியாக இருந்தமையால், ராணுவ விதி களின் படி சில பரிசோதனைகள் நடைபெறும்.

    உளவுக்கருவிகள் உள்ளதா?

    உளவுக்கருவிகள் உள்ளதா?

    அதை தொடர்ந்து, ராணுவ விசாரணைகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார். அதை தவிர்க்க முடியாது. ஏனெனில், அபிநந்தனுக்கே தெரியாமல் அவரது உடலில் பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் உளவுக்கருவிகளை பொருத்தியிருக்க வாய்ப்பு உள்ளது.

    கேள்விகள் என்னென்ன?

    கேள்விகள் என்னென்ன?

    பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன், 48 மணி நேரம் மட்டுமே போர் கைதியாக இருந்திருக்கிறார். அந்த நேரங்களில் அபிநந்தனிடம் பாகிஸ்தானியர்கள் கேட்ட கேள்விகள், நடந்துகொண்ட விதம் என அனைத்தும் அவரிடம் விசாரிக்கப்படும் என்று கூறினர்.

    1 வாரம் கழித்து விடுதலை

    1 வாரம் கழித்து விடுதலை

    1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது அபிநந்தனை போல, போர் விமானியான நச்சிகேதா பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். 1 வாரம்கழித்து அவர் விடுவிக்கப்பட்டது. அப்போது அவரிடமும் இதுபோல விசாரணை நடைபெற்றது. பின்னர் நச்சிகேதா 2003ல் மீண்டும் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டார். அவருக்கு வாயு சேனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After the military medical examination of Abhinandan, who was recovered from Pakistan, he will be subjected to intelligence inquiry under the military regulation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X