டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஆர்எஸ்.. 92 ஆயிரம் பிஎஸ்என்எல்.. எம்எடிஎன்எல் ஊழியர்கள் வேலையை விட்டு செல்ல விருப்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் இருந்து இதுவரை 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த நவம்பர் 4ம் தேதி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிதிசிக்கலை சமாளிக்க 50 வயதை கடந்த ஊழியர்கள் யார் வேண்டுமானாலும் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

இதன்படி மொத்தம் உள்ள 1.50 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்களில், சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வரும் டிசம்பர் 3ம் தேதிக்க விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்தது.

மக்களிடம் மதுவை நெருங்க விடா மாவீரன் பிரபாகரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்.. ராமதாஸ் !மக்களிடம் மதுவை நெருங்க விடா மாவீரன் பிரபாகரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்.. ராமதாஸ் !

விஆர்எஸ் கேட்டு

விஆர்எஸ் கேட்டு

சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் தற்போது வரை 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 விருப்ப ஓய்வு

விருப்ப ஓய்வு

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்துள்ள ஊழியர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்குபின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது. அதாவது சுமார் ஒருலட்சம் பேரின் விண்ணப்பம் ஏற்கப்படும் என தெரிகிறது. எனவே வரும் 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியுடன் சுமார் ஒரு லட்சம் பேர் கிடைக்கும் ஊக்கத்தொகையுடன் பணியில் இருந்து அதிகாரிப்பூர்வமாக விடைபெற போகிறார்கள்.

அதிகம் பேர் விண்ணப்பம்

அதிகம் பேர் விண்ணப்பம்

90 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் பல ஆயிரம் கோடி சம்பள பில் மிச்சமாகும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மிச்சமாகப்போகிறது. அதேநேரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தனியார் மயத்திற்கான அறிகுறியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அச்சத்தில் முடிவு

அச்சத்தில் முடிவு

இதனிடையே பல மாதங்களாக ஊதியங்கள் பிஎஸ்என்எல்லில் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வேலை இருக்குமோ இல்லாமல் போகுமோ என்ற அச்சம் மற்றும் பீதி காரணமாக பலரும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பதாக சொல்கிறார்கள். விருப்ப ஓய்வு பெறுவோருக்கு மிகப்பெரிய அளவில் கணிசமான ஊக்கத்தொகையும் ஓய்வுத்தொகையும் கிடைக்கும் என்பதால் வாங்கிக்கொண்டு நிம்மதியாக வீட்டில் இருக்கலாம் என ஆசைப்பட்டு பலரும் விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.

English summary
Over 92,000 employees of BSNL, MTNL opt for VRS scheme : according to a government source.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X