டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகளை அடிமையாக்கிய விவசாய மசோதா...ராகுல் காந்தி...பிரியங்கா காந்தி விளாசல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய விவசாய மசோதா நமது விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டியால் சிறு குறு தொழிற்சாலைகள் நசுக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

விவசாய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம், மனித சங்கிலி, ரயில் மறியல் போராட்டம் என்று நடைபெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளில் சாலைகளில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

Agriculture laws will enslave our farmers: Rahul Gandhi

விவசாய மசோதாவை கடுமையாக எதிர்த்து இருக்கும் காங்கிரஸ் நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது. துவக்கத்தில் இருந்து இந்த மசோதாவை ராகுல் காந்தி எதிர்த்து வந்தார். கார்பரேட்களுக்கு சாதகமாக விவசாய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச விலை பாதிக்கப்படும் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் இன்றும் தனது ட்விட்டரில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில், ''ஏற்கனவே ஜிஎஸ்டி சிறுகுறு விவசாயிகளை அழித்துள்ளது. இந்த நிலையில் விவசாய மசோதா விவசாயிகளை அடிமைப்படுத்தியுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

Agriculture laws will enslave our farmers: Rahul Gandhi

இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச விலை பறிக்கப்பட்டுள்ளது. கான்ட்ராக்ட் விவசாயம் மூலம் டிரில்லியன் தொழிலதிபர்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். விலையும் இல்லை, மரியாதையும் என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களது சொந்த நிலங்களிலேயே விவசாயிகள் இனி தொழிலாளர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்! புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்!

மத்திய அரசின் விவசாய மசோதா கிழக்கு இந்திய கம்பெனிகள் நம்மை அடிமைப்படுத்தியதை நினைவு கூறுகிறது. இந்த அநீதி விவசாயிகளுக்கு ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்'' என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Agriculture laws will enslave our farmers: Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X