டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி தீர்ப்பு.. அமைதியா இருக்கணும்.. யாரும் பேசகூடாது.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

அயோத்தியா விவகார தீர்ப்பு.. பாஜகவினர் கருத்து சொல்ல தடை போடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி தீர்ப்பு.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

    டெல்லி: "யாரும் எதையும் பேசக்கூடாது, எந்த கருத்தும் சொல்லக்கூடாது.. எந்த அறிக்கையும் விடக்கூடாது" அயோத்தி தீர்ப்பு நாள் நெருங்குவதையொட்டி தன்னுடைய கட்சியினருக்கு பாஜக கடிவாளம் போட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற போகிறார். அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.

    ஏனென்றால், அயோத்தி தீர்ப்பு வெறும் இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும். அதனால்தான் ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையிலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை திறந்த மனதுடன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தது.

    நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!

    பாஜக கவலை

    பாஜக கவலை

    இன்று பல கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. தீர்ப்பு தினத்தன்று நிலைமையை கட்டுபடுத்த முடியாவிட்டால், அதன் விளைவுகள் மோசமாகி விடும் என்பதுதான் பாஜகவின் பெரும் கவலை. அதனால்தான் இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

    அறிக்கைகள்

    அறிக்கைகள்

    எனினும், தீர்ப்பு வந்துவிட்டால், கோபத்தை தூண்டும் வகையில் அல்லது ஆத்திரம் கிளப்பும் வகையில், எந்தவித அறிக்கைகள் விடுவதையும் தவிர்க்க பாஜக நினைக்கிறது. அதனால் ஒரு நடத்தை நெறியை வெளியிட்டுள்ளது.

    அமித்ஷா

    அமித்ஷா

    அதன்படி, பிரதமர் மோடியும், அமித்ஷா இருவரின் கருத்துக்கள் வெளிவரும் வரை தீர்ப்பு நாளில் யாரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதே அந்த எச்சரிக்கை.. இதற்கான பிராந்திய வாரியாக கூட்டங்களும் இது சம்பந்தமாக நடத்தப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாகும் நாளில் கட்சியினரின் நடத்தை விதிமுறை குறித்து இந்த கூட்டங்களில் விரிவாக விவாதம் செய்யப்பட்டது.

    அயோத்தி வழக்கு

    அயோத்தி வழக்கு

    போன திங்கட்கிழமை கூட, கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, பெங்களூருவிலும், கொல்கத்தாவிலும், மும்பையிலும் அயோத்தி வழக்கு குறித்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    மைய கருத்து

    மைய கருத்து

    அதன்படி, தீர்ப்பு நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது, தலைவர்கள் யாரும் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அதாவது யாருடைய கருத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகாமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் மைய கருத்து.

    அமித் மாளவியா

    அமித் மாளவியா

    மேலும், கட்சியின் சமூக ஊடகப் பிரிவுகள் தேவையற்ற கருத்துகளை வெளியிடக் கூடாது என்று சமூக ஊடகப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா எச்சரித்திருக்கிறார். மொத்தத்தில் அயோத்தி தீர்ப்புக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுதல் கவனத்தையம் அது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    ahead of ayothya verdict bjp code of conduct asks party leaders and cadres to behave responsibility
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X