India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிநவீன 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ‛ப்ராஜெக்ட் 75ஐ’ திட்டத்தில் பிரான்ஸ் விலகல்

Google Oneindia Tamil News

டெல்லி: ‛ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்காக ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு தொழிற்நுட்ப உதவிகள் வழங்குவதற்கான ஏலத்தில் இருந்து பிரான்ஸ் கடற்படைய சேர்ந்த நாவல் குரூப் நிறுவனம் விலகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் எனும் திட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் மே 5 ஆம் தேதி காலை ஹோட்டல்களுக்கு விடுமுறை சென்னையில் மே 5 ஆம் தேதி காலை ஹோட்டல்களுக்கு விடுமுறை

அதன்படி 'புராஜக்ட் 75 இந்தியா' என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க இந்தியா முடிவு செய்தது. இதில் நீண்டகாலமாக இழுபறி நிலவியது.

ரூ.43 ஆயிரம் கோடி திட்டம்

ரூ.43 ஆயிரம் கோடி திட்டம்

பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை செயல்படுத்த இந்தியா மீண்டும் ஆர்வம் காட்டியது. கடந்த ஆண்டு ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் நிறுவனமான எல் அண்ட் டி ஆகியவை நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க உள்ளன.

5 நாட்டு நிறுவனங்கள்

5 நாட்டு நிறுவனங்கள்

இந்த 2 நிறுவனங்களும் வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும். வெளிநாடுகளான ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. திசென்க்குரூப் மரைன் சிஸ்டம்(ஜெர்மனி), நவான்டியா (ஸ்பெயின்), நேவல் குரூப் (பிரான்ஸ்), டேவூ(தென்கொரியா), ரோசோபோரான் எக்ஸ்போர்ட் (ரஷ்யா) ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலம் நீர்மூழ்கி கப்பலின் வேகத்தை அதிகப்படுத்துவதோடு, தண்ணீருக்குள் நீண்டநாட்கள் இருக்கும் திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிரான்ஸ் விலகல்

பிரான்ஸ் விலகல்

இதையடுத்து 2 நிறுவனங்களும் திட்டங்களின் சாராம்சங்கள் அந்தந்த நாட்டின் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தன. இந்நிலையில் தான் பிரான்ஸ் நாட்டின் கடற்படை நிறுவனமான நேவல் குரூப் இத்திட்டத்தில் இருந்து விலகி உள்ளது. இந்திய கடற்படைக்காக ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பி 75ஐ திட்டத்தில் பங்கேற்க முடியாது என பிரான்சின் கடற்படை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இதுதொடர்பாக அதன் நிர்வாக இயக்குனர் லாரன்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "திட்டத்தில் உள்ள சில நிபந்தனைகள் காரணமாக இரண்டு நிறுவனங்களுடன் கைகோர்க்க முடியவில்லை. இதனால் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஏலத்தை எங்களால் முன்னெடுக்க முடியாது. ஆயினும் பிற திட்டங்களில் இந்தியாவுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்'' என கூறியுள்ளார்.

நாளை பிரதமர் மோடி சந்திப்பு

நாளை பிரதமர் மோடி சந்திப்பு

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று டென்மார்க்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெட்ரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கிருந்து இந்தியா வரும் வழியில் நாளை பாரீசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ள நிலையில் தான் பிரான்ஸ் நிறுவனம் இப்படி கூறியுள்ளது.

English summary
France's Naval Group today said it is unable to participate in Centre's P-75I project, under which six conventional submarines are to be domestically built for the Indian Navy, due to conditions mentioned in the request for proposal (RFP) related to air independent propulsion (AIP) system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X