டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டிஸ்கர் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையத்துக்கு காங். வைக்கும் 4 கோரிக்கைகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: சட்டிஸ்கர் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி நான்கு கோரிக்கைகளை வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. சட்டிஸ்கர் மாநில சட்டசபைகக்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரு மாநில வாக்குகளும் டிசம்பர் 11ம் தேதி எண்ணப்படவுள்ளன.

Ahmad Patel demands EC to follow his suggestions

இந்த நிலையில் அங்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பெரும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சோனியா காந்தியின் செயலாளரும் எம்பியுமான அகமது படேல் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு 4 கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் 2 டிவீட்டுகளைப் போட்டுள்ளார். அதில் அகமது படேல் கூறியிருப்பதாவது:

சட்டிஸ்கர் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நான் நான்கு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கிறேன்.

1. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஸ்டிராங் ரூம்களிலிருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லும்போதும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

2. தபால் ஓட்டுக்கள் தகுதியான வாக்காளர்களிடமிருந்து தான் வந்துள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

3. ராஜ்நந்த்கோவன், கொண்டகோவன், பிலாஸ்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகளின் நடத்தையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

4. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்த சுற்று வாக்குகள் எண்ணிக்கையை நடத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் சீரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன், நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Congress leader Ahmad Patel has demanded the EC to follow his suggestions regarding Chattisgarh counting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X