துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள்.. உருவானது அகமதாபாத், லக்னோ டீம்கள்.. ஏலத்தில் வென்றது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

துபாய் : 15வது ஐபிஎல் சீசனுக்காக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில், தற்போது, சென்னை, மும்பை, , பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் 8 அணிகள் தான் ஆடி வருகின்றன.

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?

சென்னை, ராஜஸ்தான்

சென்னை, ராஜஸ்தான்

இடையில், ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டு வருடங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், தற்காலிகமாக கொச்சி மற்றும் புனே நகரங்களின் பெயர்களில் இரு அணிகள் செயல்பட்டன. ஆனால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் திரும்பவும் ஆடத்தொடங்கியது முதல் அந்த அணிகள் கலைக்கப்பட்டு விட்டன.

10 அணிகள்

10 அணிகள்

இந்த நிலையில்தான் பதினைந்தாவது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் போது மொத்தம் 10 அணிகள் பங்கேற்க வகை செய்யப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் ஆடுவதற்காக அகமதாபாத், லக்னோ, கட்டாக் , குவஹாத்தி, ராஞ்சி, தர்மசாலா ஆகிய 6 நகரங்கள் விண்ணப்பம் செய்தன.

2 புதிய அணிகள்

2 புதிய அணிகள்

இதில், குஜராத்தை சேர்ந்த அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்னோ ஆகியவற்றின் பெயர்களில் புதிய அணிகள் உருவாகியுள்ளன. சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் அகமதாபாத் அணியையும், சஞ்சிவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குரூப் லக்னோ அணியையும் நிர்வகிக்கின்றன.

விலை என்ன

விலை என்ன

இதில், லக்னோ அணி ரூ.7090 கோடிக்கும், அகமதாபாத் அணி ரூ.5166 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் இரண்டு கவர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஒன்று தனிப்பட்ட மற்றும் நிதிச் சான்றுகளாகும். இரண்டாவது கவர் ஏலம் தொடர்பான விவரங்கள் அடங்கியதாகவும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் சட்ட மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து சான்றிதழ்களை சரிபார்த்து, அவை ஒழுங்காக இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே, இரண்டாவது கவர்கள் திறக்கப்பட்டன.

English summary
IPL New Teams: Ahmedabad and Lucknow to be the two new teams at Indian Premier League (IPL). CVC Capital Partners gets Ahmedabad while RPSG Group gets Lucknow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X