டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மோடியின் பார்வை என்னை திகைக்க வைத்தது.. சந்திப்பு உத்வேகத்தை தந்தது".. சைடஸ் குழும தலைவர் பூரிப்பு

அகமதாபாத்தில் தடுப்பூசி உற்பத்தியை இன்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

Google Oneindia Tamil News

டெல்லி: "உலக நன்மைக்கான பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை என்னை திகைக்க வைத்தது.. அவரது சந்திப்பு உத்வேகத்தை அளித்தது" என்று சைடஸ் குழுமத்தில் தலைவர், பங்கஜ் ஆர்.படேல் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் சைடஸ், பாரத் பயோடெக், சீரம் ஆகிய 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.. அந்த வகையில், அகமதாபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தயாராகி வரும் ஜைகோவ்-டி கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

மோடி

மோடி

அப்போது சைடஸ் பயோடெக் பூங்கா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.. மேலும் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு அரசு உறுதுணையாக இருந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

ட்வீட்

ட்வீட்

இந்நிலையில், சைடஸ் குழுமத்தில் தலைவர் மற்றும் அக்குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆகியோர் இதுகுறித்து ட்விட் பதிவிட்டுள்ளனர்.. பிரதமரின் வருகை குறித்து தெரிவித்துள்ள சைடஸ் நிறுவனம், "மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஜைடஸ் பயோடெக் பூங்காவில் ஜிகோவ்-டி அதாவது இந்தியாவின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி தயாரிப்பை நேரில் பார்வையிட்டார்... சவாலான இந்த தொற்று நோய் காலத்தில் பிரதமரின் தலைமை மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை பாராட்டுக்குரியது.

டாக்டர்கள்

டாக்டர்கள்

ஆரோக்கியமான சமூகத்தை தட்டி எழுப்புவதில் பாரத பிரதமருடன் இணைந்து சைடஸ்ஸும் தன்னை அர்ப்பணித்து கொள்கிறது.. தொற்று மருந்து தயாரிப்பிற்கு உறுதுணையாக இருந்த ஆயிரக்கணக்கான டாக்டர்கள், முன்னணி களப்பணியாளர்கள், மற்றும் நோயாளிகளை வெகுவாக பாராட்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

அதேபோல, சைடஸ் குழுமத்தின் தலைவர், பங்கஜ் ஆர்.படேல், "உலகளாவிய நன்மைக்கான பிரதமர் மோடியின் விஞ்ஞான அறிவு மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை என்னை திகைக்கவைத்துவிட்டது.. அவரது சந்திப்பு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அவரது பார்வை ஒட்டுமொத்த உலக நன்மைக்கானது... இந்தியாவின் இந்த கோவிட் தடுப்பூசி ஒட்டுமொத்த உலகளாவிய நன்மைக்காக அர்பணிக்கப்படும், மிகப் பெரிய மனித குலத்திற்கு இது பயனளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Ahmedabad Zydus Biotech Part Tweeted about PM Narendra Modis visits
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X