டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம்.. கடைசி நேரத்தில் கை கொடுக்கும் அதிமுக.. மசோதாவிற்கு ஆதரவு!

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் அதிமுக கட்சி ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் அதிமுக கட்சி ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ராஜ்ய சபாவில் பாஜகவின் பலம் 113 ராஜ்ய சபா எம்பிக்கள் என்று ஆகும்.

இன்று லோக்சபாவில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.

நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா! நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமித்ஷா!

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த மசோதா மிக எளிதாக லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுவிடும். லோக்சபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதாக அங்கு மசோதா நிறைவேறி விடும். ஆனால் ராஜ்யசபாவில் எப்படி இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக எப்படி

பாஜக எப்படி

ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அங்கு மசோதாவை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும்.

ஆதரவு

ஆதரவு

இதனால் பாஜக தனது மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக கட்சி மசோதாவை ஆதரவு அளித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது. மொத்தம் அதிமுகவிற்கு 11 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பார்கள்.

பாஜக எத்தனை எம்பி

பாஜக எத்தனை எம்பி

இதனால் பாஜகவின் பலம் 113 ராஜ்ய சபா எம்பிக்கள் என்று ஆகும். இதனால் மசோதாவை நிறைவேற்ற பாஜகவிற்கு மேலும் 6 எம்பிக்கள் இருந்தால் போதும்.ஆகவே பிற நட்பான கட்சிகளின் உதவியை பாஜக சமயத்தில் நாடும் அல்லது அவர்களை வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ய வைத்து, அவையின் பலத்தை குறைத்து மசோதாவை நிறைவேற்றும்.

English summary
AIADMK decides to support Citizenship Amendment Bill by center government in Both houses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X