டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்..ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் அப்பீல்

23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அப்பீல் செய்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் அப்பீல் செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அப்பீல் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 23ஆம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால், அதில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு ஓ. பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிமுக பொதுக்குழுவுக்கு சிக்கல்? - என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?கொரோனாவால் அதிமுக பொதுக்குழுவுக்கு சிக்கல்? - என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஜூலை 11 பொதுக்குழுவிற்கு தடைகோரி நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக பதவிகளில் மாற்றம் கொண்டு வர தற்காலிக தடை கோரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அப்பீல்

எடப்பாடி பழனிச்சாமி அப்பீல்

நீதிமன்றத்தில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

இதை எதிர்த்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி ஜனநாயக முறைப்படி எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்

இதனிடையே நத்தம் விஸ்வநாதன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் நத்தம்விஸ்வநாதன் அப்பீல் செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் அப்பீல் செய்து உள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினும் மனு தாக்கல் செய்து உள்ளார்.

 கேவியட் மனு

கேவியட் மனு

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதனைத் தொடர்ந்து தற்போது பெஞ்சமினும் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    OPS-ன் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை... Edappadi தலைமை அவசியம் - KP Munusamy *Politics
     பன்னீர் ரோஜா மாலை

    பன்னீர் ரோஜா மாலை

    முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தான் பொதுக்குழு ஏற்பாடுகளை மேற்கொண்டவர்.கடந்த 23ஆம் தேதியன்று பல்வேறு கூச்சல், குழப்பங்கள், நிர்வாகிகளின் இடையூறுகளுக்கு மத்தியில் பொதுக்குழு நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பெஞ்சமின் ரோஜா மாலை அணிவிக்க முயன்றார் அப்போது எடப்பாடி பழனிசாமி, அட இருங்கப்பா.. சும்மா எனக் கடிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Natham Viswanathan and Former Minister Benjamin have appealed to the Supreme Court against the High Court verdict on the AIADMK General Committee. Natham viswanathan and Benjamin have appealed against the order to pass only 23 resolutions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X