டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை.. சி.வி.சண்முகம் திடீர் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது நாங்கள் தேர்தல் நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் கூறியதாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது.

இரு நீதிபதிகள் அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை- எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவு!அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை- எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவு!

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

ஓபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை தசரா விடுமுறைக்கு பின்னர் நடைபெறும் என நீதிபதிகள் தள்ளி வைத்தனர். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாத விவாதங்கள் குறித்தும் நீதிபதிகள் கூறிய கருத்துக்கள் குறித்து குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் சி.வி. சண்முகம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

நீதிபதிகள் கருத்து

நீதிபதிகள் கருத்து

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. நாங்களும் செயல்படுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு என்பது 95 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் எங்கே நாங்கள் தலையிட முடியும். ஒருங்கிணைப்பாளர் இருந்தாரா துணை ஒருங்கிணைப்பாளர் இருந்தாரா என்பதைப் பற்றி சிவில் நீதிமன்றத்தில் போட்டு நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு

வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க நாங்கள் உத்தரவிடுகிறோம் என்று சொன்னார்கள். பின்னர் நீதிபதிகள் தசரா விடுமுறைக்குப் பிறகு முழுமையாக வழக்கை விசாரிக்கிறோம். இரு தரப்பும் தங்களின் தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.

நிலுவையில் வழக்குகள்

நிலுவையில் வழக்குகள்

ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு மீது விதிக்கப்பட்ட தடையாணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்போது இந்த வழக்கும் உள்ளதால் இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டியிருக்கிறது. எனவே இரு தரப்பினரும் வாத பிரதிவாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் யாருக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 நீதிபதிகள் உத்தரவு

நீதிபதிகள் உத்தரவு

தசரா விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பிலே, பொதுச்செயலாளர் பதவிக்கு தடை விதிக்க வேண்டும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை.

தேர்தலை நடத்த தடையில்லை

தேர்தலை நடத்த தடையில்லை


பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இதுவரை எந்த தடையும் இல்லாத போதும் இதுவரை நாங்கள் தேர்தலை நடத்தவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்து தீர்ப்பு வெளியான பின்னரே பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்குவதாக இருப்பதாக இபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

நவம்பர் 21ஆம் தேதி இறுதி விசாரணை

நவம்பர் 21ஆம் தேதி இறுதி விசாரணை

எங்களின் தரப்பு கருத்தை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டு வரும் நவம்பர் 21ஆம் தேதிக்கு இறுதி விசாரணைக்காக தள்ளி வைத்தனர். எங்களைப் பொருத்தவரைக்கும் பொதுச்செயலாளர் பதவி நடத்துவதற்காக எந்த தடையும் இல்லை. இந்த நிமிடம் வரை தடையில்லை. சட்டத்தை மதித்து இறுதி தீர்ப்பு வந்த பின்னரே தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடுவோம்.

English summary
Edappadi Palanisamy supporter CV Shanmugam has said that we have not made any announcement regarding the holding of elections while the cases related to the AIADMK General Committee are pending.CV Shanmugam also said that the judges said that the hearing on this petition will be held after the Dasara holidays.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X