டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தலாக் மசோதா.. ஒன்றல்ல இரண்டு அல்ல.. அதிமுக மூன்று நிலைப்பாடு... ஆதாயமடையும் பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுக மூன்றுவிதமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. இந்த நிலைப்பாடுகளால் பாஜக அரசுதான் ஆதாயமடைய உள்ளது.

முத்தலாக் மசோதாவை கடந்த முறை லோக்சபா, ராஜ்யசபாவில் அதிமுக கடுமையாக எதிர்த்தது. தமிழக அமைச்சர்களும் கூட முத்தலாக் முறையை எதிர்த்துதான் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முத்தலாக் மசோதாவை எதிர்ப்பது என்பது மறைந்த ஜெயலலிதாவின் நிலைப்பாடு. அதனையே நாங்களும் பின்பற்றுவோம் என கூறிவந்தனர் அதிமுகவினர்.

முத்தலாக் மசோதா- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் முத்தலாக் மசோதா- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

லோக்சபாவில் அதிமுக ஆதரவு

லோக்சபாவில் அதிமுக ஆதரவு

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக லோக்சபாவில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அம்மசோதா மீது பேசிய அதிமுகவின் ஒற்றை எம்.பி. ரவீந்திரநாத் குமார், அரசுக்கு ஆதரவாக பேசினார். மசோதாவில் நல்ல அம்சங்கள் இருப்பதால் ஆதரிப்பதாக கூறினார்.

வேலூர் பிரசாரத்தில் எதிரொலி

வேலூர் பிரசாரத்தில் எதிரொலி

ரவீந்திரநாத் குமாரின் இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. அதுவும் இஸ்லாமியர்கள் வாக்குகள் கணிசமாக இருக்கும் வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் நடைபெறும் நிலையில் இப்படி ஒரு கருத்தை ரவீந்திரநாத் எடுத்தது அதிமுகவை அதிர்ச்சியடையவும் வைத்தது. திமுகவும் இதையே தேர்தல் பிரசாரமாக்கிக் கொண்டது.

ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு

ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தின் மீது அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், முத்தலாக் மசோதாவை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சாடினார். மூன்று முறை முத்தலாக் கூறுவது ஒரு கிரிமினல் நடவடிக்கை அல்ல என்றார். ராஜ்யசபாவில் மிகக் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தார் நவநீதகிருஷ்ணன்.

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்தலாக் மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. அதனால் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது அதிமுக எம்;பிக்கள் வெளிநடப்பு செய்வார்கள் என அதிரடியாக அறிவித்தார்.

பாஜகவுக்கு ஆதாயம்

பாஜகவுக்கு ஆதாயம்

முத்தலாக் மசோதா மீது லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு, எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு என மூன்றுவிதமான நிலைப்பாடுகளை அதிமுக எடுத்துள்ளது. ராஜ்யசபாவில் மசோதாவை எப்படியும் நிறைவேற்ற அதிமுக உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது என நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது பாஜக வழிகாட்டுதலில் வெளிநடப்பு செய்து மசோதாவை நிறைவேற்ற துணை நிற்கிறது அதிமுக.

English summary
AIADMK Rajya Sabha Floor Leader, A Navaneethakrishnan told that "We are against the Triple Talaq Bill. So, at the time of voting, we will walk out".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X