டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் நீங்க வந்த பிறகுதான்.. பிரதமர் மோடிக்கு ரவீந்திரநாத் எம்பி லோக்சபாவில் புகழாரம்

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் இன்று ஆதார் சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஆதார் திட்டத்தை பிரதமர் மோடி திறம்பட செயல்படுத்திய பாராட்டினார்.

இன்று வங்கி கணக்கு மற்றும மொபைல் எண்களுக்கு ஆதார் எண் பெறுவதை சட்டபூர்மமாக்கும் புதிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை லோக்சபாவில் வியாழக்கிழமை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுப்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார்.

aiadmk support aadhar new amendment bill 2019: , raveendranath kumar mp appreciated pm modi

இந்த மசோதாவில் ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுவோருக்கு குற்றப்பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படும். மேலும் ஆதார் பயனாளிகளின் தனிப்பட தகவல்களை ஊடுருவி திருடுவோருக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவையில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், ஆதார் சட்ட திருத்த மசோதா 2019க்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்றார். ஆதார் குறித்த தனிநபர்களின் தகவல்களை பாதுகாப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

நாளை பணக்கார்களுக்கு ஷாக் கொடுப்பாரா நிர்மலா சீதாராமன்.. பரம்பரை சொத்துக்கு வரி? நாளை பணக்கார்களுக்கு ஷாக் கொடுப்பாரா நிர்மலா சீதாராமன்.. பரம்பரை சொத்துக்கு வரி?

ஆதார் திட்டம் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இதனை 2014ம் ஆண்டு நம் பிரதமர் மோடி வந்த பிறகு தான் திறம்பட அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் பல்வேறு மொழி , இன, மக்கள் வாழ்கிறார்கள். இங்கு ஆதார் திட்டத்தை செயல்படுத்துவது சவாலான ஒன்றாகும். ஆனால் இதனை சிறப்பாக முறையில் நமது பிரதமர் மோடி அவர்களின் அரசு செயல்படுத்தி உள்ளது" என பாராட்டினார்.

English summary
aiamdk mp raveendranath kumar appreciated pm modi over aadhar new amendment bill at lok sabha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X