டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதா... பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக வெளிநடப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    TTV Dinakaran : அங்கு ஒரு முடிவு.. இங்க ஒரு முடிவு.. தினகரன் பேட்டி- வீடியோ

    டெல்லி: ராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. முத்தலாக் மசோதாவையும் நிறைவேற்றியே தீருவது என முடிவில் இருக்கும் பாஜக பல வியூகங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை 245. 4 இடங்கள் காலியாக இருப்பதால் மொத்தம் 241 எம்.பிக்கள்தான்.

    AIADMK to walkout from RS on Triple Talaq Bill

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 113 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 68 எம்.பிக்கள் உள்ளனர். பாஜக, காங். கூட்டணியில் இடம்பெறாத சமாஜ்வாதி, திரிணாமுல் காங், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் 42 பேர்; பாஜகவின் நட்பு கட்சிகளாக 18 எம்.பிக்கள் உள்ளனர்.

    ராஜ்யசபாவில் தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் முத்தலாக் மசோதா என்பதால் ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்துக்காக 11 ராஜ்யசபா எம்.பிக்களை கொண்ட அதிமுக பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

    அதேநேரத்தில் நட்புசக்தியாக இருக்கும் பிஜூ ஜனதா தளம் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. இப்படி ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் ஆட்டங்களை ஆடி வருகின்றன.

    இதனால் டிஆர்எஸ், அதிமுக கட்சிகளை வெளிநடப்பு செய்யும் படி கூறிவிட்டு சபையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான எண்ணிக்கையை பெறுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

    English summary
    Sources said that AIADMK may Walkout from Rajyasabha on Tripl Talaq Bill issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X