டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையாம்- வீடியோ

    டெல்லி: மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில், அதன் கூட்டணி கட்சியான அதிமுக இடம் பெறும் வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த ரிசல்ட்டுகளை அறிய, பிறரைவிடவும், அதிமுக தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிட அரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசைதான்.

    கடந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது அதிமுக. ஆனால், என்ன லாபம்? ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே.

    நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ! நாளை தேர்தல் முடிவு.. சென்னையில் கட்சி அலுவலகங்கள் தலைவர்களின் வீடுகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு !

    அமைச்சரவையில் இடம் இல்லை

    அமைச்சரவையில் இடம் இல்லை

    பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துவிட்டதால், மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் அதிருஷ்டம் அதிமுகவுக்கு கிடைக்காமல் போனது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்ற அதிமுக தலைவர்கள், பாஜக தலைமையோடு நெருக்கமாக இருந்தாலும், அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை மோடி.

    தேசிய ஜனநாயக கூட்டணி

    தேசிய ஜனநாயக கூட்டணி

    இந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது அதிமுக. எனவே இம்முறை மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தால், அமைச்சரவையில் பங்கு பெறும் ஆசையில் உள்ளனர் அதிமுக தலைவர்கள். டெல்லியில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் இந்த கேள்வியை எழுப்பினர்.

    நாளையே ஆலோசனை

    நாளையே ஆலோசனை

    அமைச்சரவையில் இணைவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஓபிஎஸ் அளித்த பதிலைப் பாருங்கள்: இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீர்ப்பை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 23ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு, அதுகுறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி மத்திய அமைச்சரவையில் இணைவது பற்றி முடிவு செய்வோம். 38 லோக்சபா தொகுதி மற்றும் 22 சட்டசபை இடைத் தேர்தலிலும், அதிமுக கூட்டணி மாபெரும் மற்றும் மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    சிக்கல்

    சிக்கல்

    மத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக தலைவர்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பது அவர்களது பேச்சுக்கள் மூலம் நன்கு புலப்படுகிறது. அதிலும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற பேரவா துணை முதல்வருக்கு இருக்கிறதாம். ஆனால், அதற்கு அதிமுகவுக்கு போதிய எம்பிக்கள் வெற்றி பெற வேண்டுமே. கருத்து கணிப்பு முடிவுகள் சில, அதிமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்கின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி வெல்லும் என கூறும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து அமைச்சரவையில் இடம் பிடிக்க மனக்கோட்டை கட்டும் அதிமுக தலைவர்கள், அதே கருத்துக் கணிப்பு தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறாது என கூறியதை மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

    English summary
    AIADMK willing to join cabinet if NDA resume power again, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X