டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மற்ற தடுப்பூசிகளை போல கொரோனா தடுப்பூசியும் இந்திய சந்தையில் 2022-இல் கிடைக்கும்.. எய்ம்ஸ் மருத்துவர்

Google Oneindia Tamil News

டெல்லி: 2022-ஆம் ஆண்டு வரை கொரோனா வைரஸ் இந்திய சந்தைகளில் எளிதாக கிடைக்காது என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,519,495 ஆக உள்ளது. இங்கு இதுவரை 126,235 பேர் இறந்துள்ளனர். கொரோனாவை தடுக்க தடுப்பூசியை சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரும் கொரோனா மேலாண்மை குறித்த தேசிய அதிரடி படையின் உறுப்பினர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில் இந்திய சந்தைகளில் கோவிட் 19 க்கான தடுப்பூசி கிடைக்க ஒரு ஆண்டுக்கு மேலாகும்.

தமிழகத்தில் கொரோனா அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும்.. தமிழக தலைமைச் செயலாளர்தமிழகத்தில் கொரோனா அடுத்து 20 நாட்கள் சவாலானதாக இருக்கும்.. தமிழக தலைமைச் செயலாளர்

மக்கள்தொகை

மக்கள்தொகை

நம் இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. மற்ற காய்ச்சல்களுக்கான தடுப்பூசி எப்படி இந்திய சந்தைகளில் கிடைக்கிறதோ அது போல் கொரோனா தடுப்பூசியும் கிடைக்க சில காலம் பிடிக்கும்.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் தடுப்பூசியை விநியோகம் செய்ய போதுமான சிரிஞ்சுகள், ஊசிகள் ஆகியவை கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியமாகும். ஏற்கெனவே உள்ள தடுப்பூசியை காட்டிலும் வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

பள்ளிகள்

பள்ளிகள்

அதன் பிறகு யாருகெல்லாம் தடுப்பூசி ஏ கொடுக்க வேண்டும்? யாருக்கல்லாம் தடுப்பூசி பி கொடுக்க வேண்டும்? இது போன்று ஏராளமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டியது உள்ளது என்றார். பள்ளிகள், பஞ்சாயத்து கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள் ஆகியவை தடுப்பூசி வழங்கப்படும் மையங்களாக செயல்படும்.

முறைகேடு

முறைகேடு

ஒரு நபருக்கு ரூ 500 வீதம் கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு ரூ 50 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனா களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். அதன் பிறகு பொதுமக்களுக்கு செலுத்தப்படும். இதில் முறைகேட்டை தடுக்க ஆதார் எண்ணை வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

English summary
Common people might get coronavirus vaccine by 2022, says AIIMS Director Randeep Guleria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X