டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா இறப்புகள் தாமதமாக அறிவிப்பு.. எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா இறப்புகளை தாமதமாக அறிவித்ததாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ், சப்தர்ஜங் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,844 ஆக உள்ளது. இங்கு 473 பேர் பலியாகிவிட்டனர். டெல்லியில் 103 கன்டெய்ன்மென்ட் பகுதிகள் உள்ளன.

AIIMS, Safdarjung accused of reporting death very late, show cause notice given

இந்த நிலையில் டெல்லியில் முன்னணி மருத்துவமனைகளான எய்ம்ஸ், சப்தர்ஜங், லோக்நாயக், ஆர்எம்எல் உள்ளிட்ட மருத்துவமனைகள் இறப்பு குறித்த தகவல்களையும் கொரோனா உறுதியானது குறித்த தகவல்களையும் மிகவும் தாமதமாக அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது டெல்லியில் கொரோனாவால் இறந்த 57 பேரின் இறப்புகளை 21 நாட்கள் கழித்தே மேற்கண்ட மருத்துவமனைகள் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அரசின் உத்தரவுகளுக்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கும் எதிரானது.

கண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு! கண்ணுக்கு தெரியாத எதிரி.. கொரோனாவிற்கு பின் உலகம் வேறு மாதிரி இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு!

ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன்னர் இறந்தவர்கள் குறித்து மே 30-ஆம் தேதி வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா இறப்புகளை தாமதமாக வெளியிட விளக்கம் கேட்டு டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Delhi government issues show cause notice to AIIMS and Safdarjung hospitals accused of reporting deaths very late.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X