டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் என்ன, சீனாவைவிடவும் டாப்புக்கு போகப்போகிறோம்.. இந்திய விமானப்படை புதிய தளபதி அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: சீனா மற்றும் பாகிஸ்தானை விட இந்திய விமானப்படையை வலிமையாக மாற்றக்கூடிய சக்தி ரஃபேல் போர் விமானங்களுக்கு, இருக்கிறது என்று இந்திய விமானப் படையின் தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் படவுரியா தெரிவித்துள்ளார்.

விமான படையின் தளபதியாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து ராகேஷ் குமார் சிங் அந்த பதவியை இன்று முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் போர் விமானங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவை. நமது விமானப்படையில் அந்த விமானங்களை சேர்த்த பிறகு புதிய உயரங்களை தொட முடியும்.

பாலக்கோட் தாக்குதலைப் போல வருங்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் தொடுக்கவும் தயங்கமாட்டோம்.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை விடவும் நமது விமானப்படையை வலிமையாக்க கூடிய சக்தி ரஃபேல் போர் விமானங்களுக்கு, இருக்கிறது.

இந்திய விமான படையின் தளபதியாக பதவிக்கு வந்ததில் நான் பெருமை கொள்கிறேன். உலகின் மிகச்சிறந்த ஒரு விமானப்படை நம்முடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடமிருந்து இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக பதவி வகித்தவர் ராகேஷ் குமார் சிங், என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்க அம்சம்.

English summary
Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria, took over as 26th Chief of the Indian Air Force today. He was commissioned into the fighter stream of IAF in Jun 1980.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X