டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Balakot Mission | பாலகோட் தாக்குதல் குறித்து இந்திய விமானிகள் பேட்டி- வீடியோ

    டெல்லி: "தாக்குதலுக்கு முன்னர் நாங்கள் நிறைய சிகரெட்டுகளை புகைத்தோம்" என்று கூறுகிறார், இந்திய போர் விமானிகள் குழுவில் ஒருவரான இளம் வீரர். ஆம்.. பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட் அருகே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமைத் தாக்கிய குழுவை சேர்ந்த ஒரு வீரர்தான் இவர்.

    பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக பல்வேறு யூகங்கள் எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் நடத்திய மிஷனில் இருந்த இரு விமானிகளிடம் ஆங்கில டிவி சேனல் என்டிடிவி பிரத்யேக பேட்டியெடுத்து தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

    இரண்டு விமானிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டாம் என்று அந்த டிவி சேனலிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம 'நோஸ்கட்' சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம 'நோஸ்கட்'

    குண்டு வீச்சு

    குண்டு வீச்சு

    இதோ, விமானிகள் என்ன சொன்னார்கள் என பாருங்கள்: "முழு தாக்குதல் நடவடிக்கையும் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. ஸ்பைஸ் 2000 எனப்படும் செயற்கைக்கோளை கொண்டு, வழிகாட்டும் குண்டுகளை பயன்படுத்தினோம்" என்று கூறியுள்ளனர் இரு விமானிகளும். பிப்ரவரி 26 அன்று, இந்திய விமானப்படையின், 12, மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு வீசின. பிப்ரவரியில் நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    குறி வைத்து தாக்கும்

    குறி வைத்து தாக்கும்

    "ஸ்பைஸ் 2000 குண்டுகள் அதன் இலக்கை எட்டியதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று மிராஜ் பைலட் தெரிவிக்கிறார். "ஸ்பைஸ் 2000 குண்டுகள் குறியை தவறவிடும் ஆயுதம் கிடையாது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் கட்டிடங்களின் கூரைகளில் ஏற்பட்ட சேதத்தை மறைக்க முயற்சிகள் நடந்து இருந்திருக்கலாம்." என்று உறுதியாக அவர் தெரிவிக்கிறார்.

    வேகமாக சென்ற பொழுது

    வேகமாக சென்ற பொழுது

    அந்த இரண்டு மணிநேரங்களும் எங்களுக்கு மிக நீண்ட நேரமாக தோன்றவில்லை. நொடிப்பொழுதில் அது கடந்துவிட்டது. ஏனென்றால் செய்ய வேண்டியது அதிகம் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். பாகிஸ்தான் தங்கள் ரேடார்களின் உதவியால், இந்திய போர் விமானங்களை கண்டறிய முடியவில்லை. தாமதமாகவே அவர்கள் கண்டுபிடித்தனர். அதற்குள், நாங்கள் எங்கள் இலக்கை தாக்கிவிட்டு திரும்பிவிட்டோம் என்கிறார்கள் இரு பைலட்களும்.

    மீண்டும் சிகரெட்

    மீண்டும் சிகரெட்

    ஸ்பைஸ் 2000 குண்டுகளை வீசும்போது இலக்கின் மீது விமானம் பறக்க தேவையில்லை. அதை தூரத்தில் இருந்தே குறி வைக்க முடியும். வெடிகுண்டு வீசும் நிலைக்கு நாங்கள் வருவதற்காக, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள பறந்தோம் என்றும் விமானிகள் தெரிவித்துள்ளன. எல்லாம் சரி.. தாக்குதலை நடத்திவிட்டு, தாயகம் திரும்பியதும், என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு, விமானிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புன்னகைத்தார்கள். அவர்களில் ஒருவர், "இன்னும் சில சிகரெட்டுகளை புகைத்தோம்" என்றார் புன்முறுவலுடன்.

    English summary
    On February 26, the Indian Air Force (IAF) had deployed 12 Mirage 2000 jets, which were meant to take out the terrorist facility, pilots spoke with NDTV.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X