டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மயான அமைதி.. வெறிச் சாலைகள்.. பீதி அனுபவம்.. வுகான் மீட்பு பணியில் இந்திய பைலட்.. பரபர தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    coronavirus:A timeline of the COVID-19 outbreak

    டெல்லி: மனிதர்கள், வாகனங்கள் இல்லாமல் பிரகாசமாக எரியும் தெருவிளக்குகள், நிசப்தமான சூழல் ஆகியவற்றை அனுபவித்ததாக சீனாவில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானி அமிதாப் சிங் தெரிவித்தார்.

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1500- க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.

    சீனாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அங்கு பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதையடுத்து தங்களை மீட்க வேண்டும் என அந்தந்த நாட்டு அரசிடம் சீனாவில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. நோய் எல்லா இடங்களிலும் பரவுவதற்கு முன்னர் சீனாவில் பல்வேறு இடங்களில் இருந்த பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை அந்தந்த நாடுகள் மீட்டன.

    சீனாவிலிருந்து வந்த புதுக்கோட்டை இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? சீனாவிலிருந்து வந்த புதுக்கோட்டை இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?

    துரிதம்

    துரிதம்

    ஏர் இந்தியா விமானம் இரு முறை வுகான் நகரத்திற்கு சென்றது. பிப்ரவரி 1-ஆம் தேதி 324 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அது போல் அடுத்த நாள் இன்னொரு விமானத்தில் 323 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

    இந்தியர்களை மீட்க வேண்டும்

    இந்தியர்களை மீட்க வேண்டும்

    இந்த விமானம் மூலம் 600-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டெடுக்கப்பட்டனர். அவர்களை மீட்டது எப்படி என்பது குறித்து ஏர் இந்தியாவின் கேப்டன் அமிதாப் சிங் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மீட்பு பணிகளை தொடங்குவதற்கு முன்னர்தான் வுகான் நகரத்திற்கு சென்று இந்தியர்களை மீட்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

    சவாலாக இருந்தது

    சவாலாக இருந்தது

    அவசர கால விமானத்தை தயார் செய்யவும் நேரம் இல்லை. அதிர்ஷ்டவசமாக ஏர் இந்தியா ஏற்கெனவே ஏராளமான மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. போன் எடுத்து எங்கள் குழுவிடம் நான் இந்தெந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினேன். விமான மீட்பு குழுவினருக்கு சீனாவுக்கு செல்ல விசாக்களை உறுதி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

    மறுக்கவில்லை

    மறுக்கவில்லை

    சில குழுவினருக்கு ஜனவரி 31-ஆம் தேதி காலை 7 மணிக்கு விசா கிடைத்தது. இன்னும் சிலருக்கு மீட்பு பணிக்கு புறப்படுவதற்கு முன்னர் கிடைத்தது. வுகான் நகரம் முழுவதும் அழுக் குரல்கள் கேட்கும் என தெரிந்த போதிலும் உயிர் கொல்லி நோய் இருக்கும் நகரத்திற்கு செல்கிறோம் என தெரிந்த் போதிலும் எங்கள் குழுவில் இருந்தவர்கள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    வுகான் செல்வதற்கு அவர்களுக்கு பயம் இல்லை. ஆனால் ஏராளமான கேள்விகள் இருந்தன. அதுக் கூட அவர்களை பற்றியது அல்ல. வுகான் நகரத்திற்கு சென்று இந்தியர்களை மீட்டெடுத்து விட்டு வீடு திரும்பினால் நம் குடும்ப உறுப்பிநர்களுக்கு அந்த நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    100 அடிக்கு மேல்

    100 அடிக்கு மேல்

    மொத்தம் 34 பேர் வுகான் சென்றோம். அதில் மருத்துவர்கள், என்ஜினீயர்கள், கேப்டன் அமிதாப் ஆகிய நான் உள்ளிட்டோர் இருந்தனர். இது மிகவும் அச்சமூட்டுகிற அனுபவமாக இருந்தது. பொதுவாக அந்த நகரத்துக்கு செல்லும்போது மற்ற விமானங்கள் ரேடியோ சேட்டர்கள் இருக்கும். ஆனால் நாங்கள் செல்லும் மரண அமைதியாக இருந்தது. தரையிலிருந்து 100 அடிக்கு மேலே சென்றபோது நகரமே பிரகாசமாக இருந்தது. சாலையில் மனிதர்கள் நடமாட்டமோ, வாகனங்களின் இயக்கமோ இல்லை.

    ஆள் நடமாட்டம்

    ஆள் நடமாட்டம்

    வுகான் விமான நிலையம் எந்த வித ஆள் நடமாட்டமும் இன்றி இருளில் மூழ்கியிருந்தது. விமானங்கள் இயக்கப்படவில்லை. பேரழிவை வெளிப்படுத்துவது போல் இருந்தது என்றார் அமிதாப் சிங். வுகான் நகரத்திற்கு ஏற்கெனவே இரு முறை மீட்பு பணிகளுக்காக சென்றுவிட்டீர்கள். இப்போது நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை வுகான் செல்ல சொன்னால் செல்வீர்களா என்ற கேள்விக்கு ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டால் நிச்சயமாக செல்வேன் என்றார்.

    English summary
    Air India pilot who planned Wuhan evacuation describes that it is a challenging operation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X