டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை அழைத்து வர மாஸ்கோ புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த விமானிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Recommended Video

    விமானிக்கு கொரோனா... அவசரமாக திரும்பி Air India விமானம்

    கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டம் மூலம் மீட்கப்படுகிறார்கள்.

    Air Indias plane return to Delhi after finds pilot is Covid 19 positive

    இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களும் கடற்படையின் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏர் இந்தியா விமானமான ஏ-320 நியோ விமானம் மாஸ்கோவில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டது.

    இந்த நிலையில் அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் வான்வெளியை அடைந்தது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய விமானிகளில் ஒருவருக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது. இதையடுத்து விமானத்தை மீண்டும் டெல்லிக்கே வர விமான கட்டுப்பாட்டு மையம் உத்தரவிட்டது.

    அதன்பேரில் விமானம் டெல்லியை மதியம் 12.30 மணிக்கு அடைந்தது. அந்த விமானத்தில் இருந்த விமான குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மாஸ்கோவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேறு விமானம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

    ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது

    இதுகுறித்து ஏர் இந்திய விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில் அந்த விமானிக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் வைரஸ் தொற்று உறுதியானது என்று தெரிவித்தனர்.

    English summary
    Air India's plane return to Delhi after it finds pilot is Coronavirus positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X