டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுக்க ஏர் இந்தியாவின் விமானச் சேவை இன்று அதிகாலை முதல் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்திய அரசின், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம், உலகின் பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இன்று காலை 3 மணிக்கு விமான நிறுவனத்தின், மெயின் சர்வர் டவுன் ஆகிவிட்டது. இதன் காரணமாக, பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கொடுக்க முடியாத சூழல் எழுந்தது. உலகமெங்குமே பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

Air India server restored hours after shutdown affected operations globally

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை ஷேர் செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

என்ன நடக்கிறது அம்பானி குடும்பத்தில்.? தந்தை காங்., வேட்பாளருக்கு ஆதரவு, மகனோ மோடி கூட்டத்தில்.. என்ன நடக்கிறது அம்பானி குடும்பத்தில்.? தந்தை காங்., வேட்பாளருக்கு ஆதரவு, மகனோ மோடி கூட்டத்தில்..

இந்த நிலையில், 5 மணி நேர இடையூறுக்கு பிறகு, சர்வர் சரி செய்யப்பட்டது. இதுபற்றி ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோஹனி, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சிஸ்டம் மீண்டும் சரி செய்யப்பட்டது. மீண்டும், சிஸ்டம் செயல்பட ஆரம்பித்துவிட்டது. பயணிகள் இடையூறுக்கு உள்ளானதிற்கு, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சர்வர் பிரச்சினையால், இன்று பல்வேறு விமானங்களும் காலதாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா, விமான பயணத்தை மேற்கொள்ள முடியாத பயணிகளால், மும்பை விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால், பிற விமான நிறுவனங்களுக்கு பயணிக்க வந்திருந்த பயணிகளுக்கும் தொல்லை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி, இதேபோன்று சர்வரில் பிரச்சினை ஏற்பட்டதால், ஏர் இந்தியாவின் 25 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Air India international and national flights have been affected after problems in the airline's SITA server. This is the second time in a year that the airline has been hit after its server shut down globally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X