டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் மிக ஆபத்தான அளவில் காற்று மாசு.. மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள காற்று மாசால் மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் அபாயம் ஏற்படும் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 20 நாட்களாக டெல்லியில் காற்று மாசுவால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

கடந்த 20 நாட்களில் காற்றின் தரம் PM 2.5 ஆக உள்ளது. இது உலக சுகாதார நிலையம் அனுமதிக்கப்பட்ட வரம்பை காட்டிலும் 25 மடங்கு மிகவும் விஷத்தன்மையுள்ள காற்றாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த காற்று மாசை விட 30 புள்ளிகள் அதிகமாகும்.

மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு! மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு!

டெல்லி மக்கள்

டெல்லி மக்கள்

காற்றின் தரம் இதே அளவே நீடிக்கவில்லை என்றாலும் காற்றில் விஷத்தன்மை கொண்ட மாசுக்கள் அதிக அளவு இருப்பதால் டெல்லி மக்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கும். ஒரு மனிதரின் நிர்ணயிக்கப்பட்ட வாழ்நாள் காலத்தை விட 17 ஆண்டுகள் குறைந்துவிடும் அபாயம் இந்த டெல்லி காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு ஏற்படும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

சிகாக்கோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று கடந்த 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளை கொண்டு நடத்திய ஆய்வில் அதிக அளவிலான காற்று மாசை சுவாசிக்கும் டெல்லியில் வசிக்கும் நபர்களின் வாழ்நாள் 10 ஆண்டுகள் குறையும் என்றும் அது போல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் வாழும் மக்களுக்கு 6 ஆண்டுகளும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஓராண்டும் வாழ்நாள் காலம் குறையும்.

ரத்தத்தை உறைய வைக்கும்

ரத்தத்தை உறைய வைக்கும்

PM 2.5 என்பது நுண்ணிய காற்று மாசு ஆகும். இது மனித முடியின் அகலத்தில் 3 சதவீதம் கொண்டதாகும். இந்த எண்ணிக்கையிலான தரம் கொண்ட காற்று நம் உடலில் செல்லும் போது ரத்த நாளங்களில் ரத்தத்தை கட்ட வைக்கும், ரத்த ஓட்டத்தை தடை செய்யும்.

செயல்பாடின்மை

செயல்பாடின்மை

இதனால் மாரடைப்பு, மூளைச் சாவு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உலகளவில் இறப்பு விகிதம் அதிகரிக்க காரணமான காரணிகளில் 5-ஆம் இடத்தில் இருப்பது காற்று மாசு ஆகும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, உடல்நல செயல்பாடின்மை உள்ளிட்டவை ஏற்படும்.

விவசாயக் கழிவுகள்

விவசாயக் கழிவுகள்

குளோபல் ஏர் ரிப்போர் என்ற ஆய்வு நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய ஆய்வில் சாலை விபத்துகள், மலேரியா காய்ச்சலை காட்டிலும் காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகளால் இறப்போரே அதிகம் ஆகும். இந்த காற்று மாசுக்கு வடஇந்தியாவில் தெர்மல் மின் நிலையங்கள் வெளிவிடும் கழிவுகள், வாகன புகை, விவசாயிகள் எரிக்கும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே காரணங்களாக சொல்லப்படுகின்றன.

English summary
A shockin information on Air Pollution, that it may cut short life expentancy of Delhi people by 17 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X