டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-ஆவது நாளாக வாகன கட்டுப்பாட்டு தொடக்கம்.. ஓரளவுக்கு உயர்ந்தது காற்றின் தரம்.. மக்கள் நிம்மதி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 2ஆவது நாள் வாகன கட்டுப்பாட்டு தொடங்கிய நிலையில் காற்றின் தரம் நேற்றை காட்டிலும் இன்று ஓரளவுக்கு உயர்ந்துள்ளது.

டெல்லியில் பெரும்பாலான இடங்களில் காற்று மாசு காரணமாக மக்கள் கடந்த ஒரு வாரமாக கடும் அவதியில் உள்ளனர். இந்த நிலையில் 8 இடங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Air Quality Index improved as Odd Even Scheme worked successful

இதைத் தொடர்ந்து காற்று மாசை குறைக்க வாகன இயக்கத்தை குறைத்தாக வேண்டும் என்ற முடிவை டெல்லி அரசு எடுத்தது. இதையடுத்து நேற்று முதல் வாகன கட்டுப்பாட்டை தொடங்கியது.

அதாவது ஒற்றைப்படை எண், இரட்டை படை எண் என்ற முறையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த முயற்சியால் நேற்று 15 லட்சம் வாகனங்கள் சாலைகளில் பயணிக்கவில்லை.

காங்கிரஸ்- என்சிபியை மலை போல் நம்பிய சிவசேனா.. ஆதரவு அளிக்க சோனியா நாசுக்காக மறுப்பு?காங்கிரஸ்- என்சிபியை மலை போல் நம்பிய சிவசேனா.. ஆதரவு அளிக்க சோனியா நாசுக்காக மறுப்பு?

இதனால் நேற்று மாலை காற்று மாசு ஓரளவு குறைந்தது. பல இடங்களில் காற்று மாசு தர குறியீடு 500-க்கு மேல் இருந்த நிலையில் இன்று காலை பல இடங்களில் 500-க்கு கீழ் தர குறியீடு வந்தன. எனினும் ஒரு சில இடங்களில் 500-க்கு மேல் உள்ளது.

நேற்றைய தினம் வாகன கட்டுப்பாட்டை மீறிய 259 பேருக்கு ரூ 4000 அபராதம் விதிக்கப்பட்டது. அதில் பாஜக தலைவர் விஜய் கோயலும் ஒருவர். இந்த முறையால் அலுவலகத்துக்கு சீக்கிரமாகவே போய்விட்டதாக சிலர் தெரிவித்தனர்.

English summary
Air quality Index in Delhi improves when compared on Sunday. Most of the places back from severe category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X