டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்: மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசானது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.

ak sinha ias appointed as Cauvery Management Authority chairman : central government

உச்ச நீதிமன்றம் உத்தரவினால் காவிரி நதிநீர் பிரச்னைகளை தீர்பபதற்கும், நதிநீர் பகிர்வு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் இந்த ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த காவரி நதிநீர் ஆணையத்திற்கு இதுவரை மத்திய அரசு தலைவராக யாரையும் நியமிக்காமல் இருந்தது. இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டு இருந்தது.

இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு

இந்நிலையில் மசூத் உசேனை நீக்கிவிட்டு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக பதவி வகித்து வந்த வந்த மசூத் அசார் அண்மையில் ஒய்வு பெற்றார். இதையடுத்து கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மசூத் அசார் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் பதவிக்கு யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.

English summary
central government order that Central Water Resources Commission Chairman ak sinha ias also appointed as Cauvery Management Authority chairman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X