டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆம் ஆத்மியிலிருந்து விலக தயார்.. எம்எல்ஏ அல்கா லம்பா அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவது தொடர்பான தீர்மானத்திற்கு டெல்லி எம்எல்ஏ அல்கா லம்பா ஆதரவு அளிக்காததால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி ஆம் ஆத்மி கூறியுள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

alka lamba aap mla asked to resign in row over rajiv gandhi resolution

இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். அதனால் அவரை கட்சியில் இருந்து விலகுமாறு கட்சி தலைமை தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், "ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சியினர் கோபம் கொண்டனர்.

ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார்.

எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்" என்றார்.

English summary
AAP dominated Delhi assembly passed a resolution demanding that former Prime Minister Rajiv Gandhi be stripped of the Bharat Ratna, alleging that he had justified the 1984 anti-Sikh riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X