டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பாவை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் அல்கா லம்பா. 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணைந்தார்.

Alka Lamba MLA disqualified by Delhi Assembly Speaker

கடந்த 6-ந் தேதி ஆம் ஆத்மியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்த கையோடு சோனியா காந்தியை சந்தித்து மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டார் அல்கா லம்பா. இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. செளரப் பரத்வாஜ், சபாநாயகரிடம் மனு கொடுத்தார்.

இதனை ஏற்று அல்கா லம்பா இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியில் ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Delhi Assembly Speaker Ram Niwas Goel decided to disqualify Alka Lamba MLA who returend to Congress from AAP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X