டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும்.. முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா தலைநகரான டெல்லியை மிக மோசமாக பாதித்துள்ளது.

 All autorickshaw drivers and taxi drivers in Delhi will be given Rs 5000 : Kejriwal

டெல்லி நகரில் உள்ள மருத்துவனைகளில் இடமில்லை. ஐசியூ படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு என டெல்லி கடுமையான சூழலில் சிக்கி தவிக்கிறது.

இதையடுத்து டெல்லியில் கட்டுக்குள் வராத கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லாக்டவுன் நடவடிக்கையை மேலும் ஒரு வாரம் அதாவது மே 10-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது நிவாரண அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஆறுதல்! 3வது நாளாக குறையும் கொரோனா - இப்படியே போச்சுன்னா பெட்டர்ஆறுதல்! 3வது நாளாக குறையும் கொரோனா - இப்படியே போச்சுன்னா பெட்டர்

இதேபோல் டெல்லி உள்ள அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் (72லட்சம்) இரண்டு மாதங்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்., 2 மாதங்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதால் லாக்டவுன் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என்று எண்ண வேண்டாம். இரண்டு மாதங்களுக்கு மக்களுக்கு உதவவே உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளன என்று கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.

English summary
COVID19India: Arvind Kejriwal: Delhi Govt will extend financial help of Rs 5,000 to auto-rickshaw & taxi drivers who have been hit by lockdown; to give free ration for two months to 72 lakh ration card holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X