டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது மிக மோசமான அறிகுறி.. இந்திய பொருளாதாரம் பற்றி எச்சரிக்கும் நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி!

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Abhijit Banerjee Wins Nobel Prize For Economics | Oneindia Tamil

    டெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    2019ம் வருடத்திற்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜிதான் தற்போது இந்திய பொருளாதாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

    நோபல் வெற்றியாளர் அபிஜித் சொன்ன திட்டங்கள்.. தீவிரமாக செயல்படுத்தும் முதல்வர் பழனிசாமி.. செம!நோபல் வெற்றியாளர் அபிஜித் சொன்ன திட்டங்கள்.. தீவிரமாக செயல்படுத்தும் முதல்வர் பழனிசாமி.. செம!

    மோசம்

    மோசம்

    அபிஜித் பானர்ஜி அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நிலையாக இல்லை. மிகவும் மோசமான நிலையில் அது உள்ளது. இதற்காக இப்போதே அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்போதே சரியான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

    இந்திய பொருளாதாரம்

    இந்திய பொருளாதாரம்

    இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமாக இருக்கிறது. இதை இவ்வளவு நாள் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது அரசே இதை ஏற்க தொடங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் எதிர்க்காலம் எப்படி இருக்கும் என்று பின்பும் யோசிக்கலாம்.

    எதுவும் சரியில்லை

    எதுவும் சரியில்லை

    தற்போது இந்திய பொருளாதாரத்தில் எதுவும் சரியில்லை. இதை பற்றி கருத்து கூற எனக்கு முழு உரிமையா இருக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தியே இப்போது குறைந்துவிட்டது. இது போன்ற விஷயங்கள் எப்போதாவதுதான் நடக்கும். இப்போது நடந்து வருகிறது. இது மிக மோசமான அறிகுறி.

    எல்லாம் பொய்

    எல்லாம் பொய்

    தற்போது மத்திய அரசு சில புள்ளி விவரங்களை ஏற்றுக்கொள்வது கிடையாது. அரசுக்கு எதிராக வரும் புள்ளி விவரங்களை பொய் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதை அரசு ஏற்க வேண்டும்.

    அரசு ஏற்க வேண்டும்

    அரசு ஏற்க வேண்டும்

    அதை அரசு ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் இறங்க வேண்டும். அரசு மிக மோசமான நிதி பற்றாக்குறையில் இருக்கிறது. இப்போது தற்காலிக தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் பணம் இருக்குமே தவிர எதிர்காலத்திற்கு இருக்காது, என்று அபிஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    All is not well with Indian economy says Noble winner Abhijit Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X