டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி தேர்தல்: சீட் மறுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 15 பேருக்கு பாஜக, காங். வலை- கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி தேர்தல்: சீட் மறுக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 15 பேருக்கு பாஜக, காங். வலை- கெஜ்ரிவால்

டெல்லி: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட 15 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு பாஜக. காங்கிரஸ் கட்சிகள் வலைவீசுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் செயல்படுகிறது.. காங்.எம்பி மாணிக்கம் எச்சரிக்கைஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் செயல்படுகிறது.. காங்.எம்பி மாணிக்கம் எச்சரிக்கை

15 பேருக்கு சீட் இல்லை

15 பேருக்கு சீட் இல்லை

இதில் 15 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் 15 எம்.எல்.ஏக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கெஜ்ரிவால் விரும்பவில்லை

கெஜ்ரிவால் விரும்பவில்லை

ஷீலாம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹாஜி இஷ்ராக் இது குறித்து கூறுகையில், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டத்தை ஆதரிக்குமாறு கெஜ்ரிவாலிடம் வேண்டுகோள் விடுத்தேன். இதை அவர் விரும்பவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

சாஸ்திரி பேரனுக்கு சீட் இல்லை

சாஸ்திரி பேரனுக்கு சீட் இல்லை

இதேபோல் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரிக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி மகாபால் மிஸ்ராவ்வின் மகன் வினய் குமார் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ10 கோடி லஞ்சம்

ரூ10 கோடி லஞ்சம்

மேலும் சீட் மறுக்கப்பட்ட பதர்பூர் எம்.எல்.ஏ. என்.டி. சர்மா, தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் எனில் ரூ10 கோடி கொடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு வலை

எம்.எல்.ஏ.க்களுக்கு வலை

இதனிடையே இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், போட்டியிட வாய்ப்பு தரப்படாத 15 எம்.எல்.ஏக்களை பிற கட்சிகள் விலைக்கு வாங்க முயற்சிக்கின்றன. ஆனால் 15 எம்.எல்.ஏக்களும் ஆம் ஆத்மி என்கிற குடும்பத்தின் உறுப்பினர்கள். அவர்கள் எங்களுடனேயே எப்போதும் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

English summary
Delhi Chief Minister and AAP President Arvind Kejriwal said that, Arvind other parties are in touch with 15 sitting AAP MLAs who have been denied tickets:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X