டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் பரவியதை உணர்த்த 14 அறிகுறிகள் இருக்காம்! 73% பேருக்கான முதல் அறிகுறி என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் பரவலுக்கான 14 விதமான அறிகுறிகள் குறித்து பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, நோய் பாதிப்பு உள்ளிட்டவைகளால் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

    இது எப்போது முடிவுக்கு வரும் என்பதுகுறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த கொரோனா தொற்று ஓமிக்ரானுடன் முடிவுக்கு வரும் என வைராலஜிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!

    இருமல்

    இருமல்

    கொரோனா வைரஸ் என்றால் தொண்டை கரகரப்பு, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் சொல்லப்பட்டன. ஆனால் இந்த ஓமிக்ரான் வேரியண்ட்டானது டெல்டா அறிகுறியிலிருந்து சற்று மாறுபடுகிறது. டெல்டா வேரியண்ட் நோயாளியை மிகவும் தீவிர நிலைக்கு கொண்டு சென்றது. அத்துடன் மருத்துவமனையில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன?

    ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன?


    நிறைய பேருக்கு காய்ச்சல், லேசான இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு, மூச்சு பிரச்சினை, நெஞ்சு வலி , நுரையீரல் பிரச்சினை உள்ளிட்டவை ஏற்பட்டன. ஆனால் ஓமிக்ரானோ நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. சாதாரண காய்ச்சல் அல்லது சளியை போலவே இந்த ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    14 விதமான அறிகுறிகள்

    14 விதமான அறிகுறிகள்

    இந்த நிலையில் அதிக அறிகுறிகள் முதல் குறைந்த அறிகுறிகள் வரை என 14 விதமான ஓமிக்ரான் அறிகுறிகளை விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர். அவை நோயாளிகளுக்கு ஏற்படுவதை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு மூக்கு ஒழுகுதல் முதன்மை அறிகுறியாக உள்ளது. அது போல் 68 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

    ஓமிக்ரானின் அறிகுறிகள்

    ஓமிக்ரானின் அறிகுறிகள்

    உடல் சோர்வு 64 சதவீதம் பேருக்கும், தும்மல் 60 சதவீதம் பேருக்கும், தொண்டையில் தொற்று 60 சதவீதம் பேருக்கும், இருமல் 44 சதவீதம் பேருக்கும், தொண்டை கட்டுதல் 36 சதவீதம் பேருக்கும், குளிர் 30 சதவீதம் பேருக்கும் காய்ச்சல் 29 சதவீதம் பேருக்கும், தலைச் சுற்றல் 28 சதவீதம் பேருக்கும், மூளை மழுங்கி போதல் 24 சதவீதம் பேருக்கும், சதை பிடிப்பு 23 சதவீதம் பேருக்கும் வாசனை இழப்பு 19 சதவீதம் பேருக்கும் நெஞ்சு வலி 19 சதவீதம் பேருக்கும் ஏற்பட்டுள்ளது என மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களில் அதிகம் பேருக்கு மூக்கு ஒழுகுதல் இருந்துள்ளது. அதே போல வெகு சிலருக்கு நெஞ்சு வலியும் ஒரு அறிகுறியாக இருந்துள்ளது.

    English summary
    Here are the 14 symptoms of Omciron. Do you Know?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X