டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசின் உத்தரவுக்கு சில நாட்களுக்கு முன்.. 1.6 கோடி வீடியோக்களை நீக்கிய டிக்டாக்.. ஏன்? என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு டிக்டாக்கிற்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் டிக்டாக் இந்தியாவில் மொத்தம் 1.6 கோடி வீடியோக்களை நீக்கியது.

டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. லடாக் சண்டை நிலவி வந்த போது இந்த தடை விதிக்கப்பட்டது.

ஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம் ஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்

தீவிர முயற்சி

தீவிர முயற்சி

தற்போது இந்த செயலிகளை மீண்டும் கொண்டு வர அந்த நிறுவனங்கள் முயன்று வருகிறது. அதிலும் டிக்டாக் செயலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். எங்களால் டிக்டாக் இல்லாமல் இருக்க முடியவில்லை என்று பலர் கூறியுள்ளனர். இது தொடர்பாக டிக்டாக் நிறுவனமும் மத்திய அரசோடு பேசி வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

டிக்டாக் செயலி தகவல் திருட்டில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. அதாவது இந்தியர்களின் டேட்டாக்களை திருடியதாக டிக்டாக் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதோடு இந்தியர்களின் டேட்டாக்களையே தவறாக பயன்படுத்தியதாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தகவல் திருட்டு புகாரை டிக்டாக் மறுத்துள்ளது.

நீக்கியது

நீக்கியது

இந்த நிலையில் மத்திய அரசு டிக்டாக்கிற்கு தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் டிக்டாக் இந்தியாவில் மொத்தம் 1.6 கோடி வீடியோக்களை நீக்கியது. 2019 இறுதியில் இருந்து 2020 ஜூன் இறுதி வரை இந்தியாவில் 1.6 கோடி வீடியோக்களை டிக்டாக் நீக்கி உள்ளது. மத்திய அரசின் வேண்டுகோள் மற்றும் புகாரை தொடர்ந்து இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டு உள்ளது.

ஏன் காரணம்

ஏன் காரணம்

இந்த வீடியோக்களை நீக்க மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. பாலியல் தொடர்பான வீடியோக்கள், பொய்யான வீடியோக்களை வெளியிடுதல், வன்முறையை பரப்பும் வீடியோக்களை வெளியிடுதல், இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைமுறைக்கு (வன்முறை, பொய் பரப்புதல்) எதிராக வெளியிடுதல் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

 மொத்தமாக நீக்கியது

மொத்தமாக நீக்கியது

மத்திய அரசு வேண்டுகோளும், டிக்டாக் இந்திய பிரிவு எடுத்த முடியும் இதற்கு காரணம் ஆகும். இந்த விதிகளை மீறிய வீடியோக்களை டிக்டாக் நீக்கி உள்ளது. இந்தியாவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தவறான வீடியோக்களை டிக்டாக் நீக்கி உள்ளது. ஆனால் தற்போது அதே டிக்டாக் நிலைமை மோசமாகி உள்ளது. ஆனால் அதே டிக்டாக் செயலி மொத்தமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

English summary
All you need to know about why TikTok took down millions of videos in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X