டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிடுகிடுக்க வைத்த ரபேல் டீல்.. உண்மையில் நடந்தது என்ன?

ரபேல் ஒப்பந்த ஊழல் என்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் தொடர்பாக 5 மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்த ஊழல் என்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

    ரபேல், ரபேல், ரபேல்.. பாஜகவின் காதுகளில் கடந்த சில மாதங்களாக ராம் என்ற வார்த்தையை விட ரபேல் என்ற வார்த்தைதான் அதிகமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் பிரச்சனையை கையில் எடுக்கும் போது அது இவ்வளவு பெரிய பூதாகரமாக வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.

    பாதுகாப்பு துறை அமைச்சர் ''அதெல்லாம் ராணுவ ரகசியம்'' என்று மூடி மறைக்க பார்த்த விஷயங்களை ராகுல் காந்தி ஒன்று ஒன்றாக புட்டு புட்டு வைத்தார். இதோ இப்போது ரபேல் விவகாரம் மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

    ரபேல் என்றால் என்ன

    ரபேல் என்றால் என்ன

    ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இது இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் முதலில் இந்தியாவின் தேர்வு ரபேல் விமானம் கிடையாது. ரபேல் போலவே நிறைய MMRCA ரக விமானங்கள் உலகின் பிற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. மார்டின் எஃப் - 16, போயிங் எஃப்/ஏ 18, யூரோபைட்டர் டைபூன், ரஷ்யா மிக் 35, ஸ்வீடன் சாப் கிரிப்பேன் மற்றும் ரபேல் ஆகிய விமானங்கள் இதற்காக சோதனை செய்யப்பட்டது. கடைசியில் விலை மற்றும் தேவையை வைத்து ரபேல் தேர்வு செய்யப்பட்டது.

    எப்போது போடப்பட்டது

    எப்போது போடப்பட்டது

    முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்க செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் இதற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    பிரான்ஸ் எப்படி வந்தது

    பிரான்ஸ் எப்படி வந்தது

    முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனாலும் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்ட்டது. இரண்டு நாட்டிலும் மாற்றி மாற்றி தேர்தல் நடந்த காரணத்தால் ஒப்பந்தம் செய்யப்படாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது.

    ஒப்பந்தம் நடந்தது

    ஒப்பந்தம் நடந்தது

    அதன்பின் 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்பின்தான் பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது. முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.

    காங்கிரஸ் என்ன செய்தது

    காங்கிரஸ் என்ன செய்தது

    காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள் உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

    பாஜக என்ன செய்தது

    பாஜக என்ன செய்தது

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    காங்கிரஸ் ஒப்பந்தம் என்ன

    காங்கிரஸ் ஒப்பந்தம் என்ன

    காங்கிரஸ் ஒரு விமானத்தை 350 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. காங்கிரஸ் ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம்.

    பாஜக ஒப்பந்தம்

    பாஜக ஒப்பந்தம்

    ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.1321 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதவாது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது.

    மோசமான இழப்பு

    மோசமான இழப்பு

    126 விமானத்திற்கு பதில் 36 விமானம் மட்டுமே வாங்கப்பட்டு இருப்பதால், சரியான இழப்பு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகிறது.பாஜக மூலம் இப்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கூறிய விலைக்கு வாங்கி இருந்தால் மொத்தமாக 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் இப்போது 36 விமானங்களை வாங்கவே 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    மூன்றாம் உலக நாடுகளுக்கு பிரான்ஸ் விமானங்களை கொடுத்த விலையை விட அதிக விலைக்கு இந்தியா வாங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எகிப்த், கத்தாருக்கு விற்கப்பட்ட போது இதே விமானம் ரூ.1,319.80 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.

    பெரும் குற்றம்

    பெரும் குற்றம்

    Dassault நிறுவனம் இந்தியாவிற்கு விற்கும் 108 உதிரி பாக விமானங்களை இந்தியாவில் வைத்து தயாரித்து முழு விமானமாக மாற்றுவார்கள். இதற்கான ஒப்பந்தம் டிஆர்டிவோ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கும் அளிக்கப்பட கையெழுத்தானது. இதனால் அந்த தொழில்நுட்பம் இந்திய அரசுக்கு கிடைக்கும். இதனால் சில வருடங்களில் நாமே ரபேல் விமானத்தை உருவாக்க முடியும்.

    பாஜகவும் ரிலையன்சும்

    பாஜகவும் ரிலையன்சும்

    ஆனால் பிரதமர் மோடி வந்த பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, பங்குதாரர்கள் கைமாறி இருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் இதில் இருந்து நீக்கப்பட்டு அங்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்காக எத்தனை கோடி கைமாறியது என்று யாருக்கும் தெரியவில்லை.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் பாதுகாப்பு துறையில் பல காலமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இதில் கால் வைத்தது கூட இல்லை. இப்படி இருக்கையில் அனுபவமும் இல்லாத, அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அதுவும் ரகசிமாக ஒரு ராணுவ ஒப்பந்தத்தை கொடுக்க காரணம் என்ன என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதுதான் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்க போகும் அந்த ஊழலாக இருக்க போகிறது.

    என்ன குற்றச்சாட்டு

    என்ன குற்றச்சாட்டு

    இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பொதுநல மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்.

    1. ஏன் குறைவான ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டது?

    2. ஏன் குறைவான விமானங்களை காங்கிரஸ் வைத்த விலையை விட அதிக விலைக்கு வாங்கினார்கள்?

    3. ஏன் எச்ஏஏ நிறுவனம் தூக்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது?

    4. ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளே வந்தது எப்படி? ஆகிய கேள்விகள் இதில் முன்வைக்கப்பட்டது.

    காங்கிரஸ் ஆதாரம்

    காங்கிரஸ் ஆதாரம்

    ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததே நிர்மலா சீதாராமன்தான், அதற்கான ஆவணங்களில் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இருக்கிறது என்றும் காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

     ஆதாரங்கள் என்ன

    ஆதாரங்கள் என்ன

    பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற பின்தான் இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மோடிக்கு இதில் பெரிய தொடர்பு உள்ளது என்றுள்ளது.

    1. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கியது தொடங்கி இதற்கு முழு முதற்காரணமாக இருந்தது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான்.

    2. ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் 2015 மார்ச்சில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

    3. அவர் காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானம் ஒப்பந்தம் செய்யப்பட்டதையும், பாஜக ஆட்சியில் அது வெறும் 26 விமானங்களாக குறைந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    4. ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய சந்தோசமாக இருக்கிறது என்று பாஜகவிற்கு எதிராக கூறியுள்ளார்.

    யார் வழக்கு

    யார் வழக்கு

    ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அதன்பின் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.

    நீண்ட விசாரணை

    நீண்ட விசாரணை

    கடந்த ஒரு மாதமாக ரபேல் ஒப்பந்தத்தில் நடந்து முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் மத்திய அரசு சில முக்கிய விவரங்களை சொன்னது.

    1. மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது.

    2. விமானம் குறித்த உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலை விவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.

    3. பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.

    4. மேலும் மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை அரசு தேர்வு செய்யவில்லை. அதை தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வு செய்தது என்று கூறியது.

    5. டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா, இல்லை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்கலாமா என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    English summary
    All you really need to know about Rafale deal and the scam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X