டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா!

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.

Alok Verma officially resings from CBI director post

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய இரண்டு நாட்களில் சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்பு கூட்டம் மூலம் அலோக் வெர்மா நீக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் நடத்திய ஆலோசனையில் அலோக் வெர்மாவை நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் நீதிபதி ஏ.கே சிக்ரி ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். காங்கிரஸ் லோக் சபா தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இதற்கு எதிராக வாக்களித்தார். 2 பேர் ஆதரவாக வாக்களித்ததால், அலோக் வெர்மா நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் அலோக் வெர்மா புதிய பதவியை ஏற்கவும் மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க அலோக் வெர்மா மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வருகிறது. பொறுப்பை ஏற்க மறுத்து மத்திய பணியாளர் நலத்துறைக்கு அலோக் வர்மா கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.

English summary
Alok Verma officially resigns from CBI director post. He refuses to accept any new post, as per sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X