டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆபரேஷன் தாமரை.. பாஜகவுடன் கூட்டணியா?.. அமித்ஷாவை மீண்டும் சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்.. பரபர டெல்லி

அமித்ஷாவை அமரீந்தர் சிங் மீண்டும் சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கேப்டன் அமரிந்தர் சிங், தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகிறது.. அதற்கேற்றபடி, டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று மீண்டும் சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்துவருகின்றன.

பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வந்தவர் அமரிந்தவர் சிங்.. ஆனால், மாநில காங்கிரஸ் தலைவரான சித்துவுக்கும் இவருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வந்தது..

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

ஒருவருக்கொருவர் சரமாரியாக விமர்சித்து கொண்டனர்.. இவர்களின் விவகாரத்தை கட்சி மேலிடத்தால்கூட தீர்த்து வைக்க முடியவில்லை..

அவமானம்

அவமானம்

இதையடுத்து, காங்கிரஸில் தன்னை அளவுக்கு அதிகமாக அவமானப்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி அமரிந்தர் சிங் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.. அமரிந்தர் இப்படி ஒரு முடிவு எடுத்ததுமே, ஒருவேளை அவர் பாஜகவில் இணைய போகிறாரோ என்ற சந்தேகங்கள் கிளம்பின.. அதற்கேற்றபடி, அன்றைய தினம் மாலையே டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் அமரிந்தர் சிங் சந்திக்க போவதாகவும் செய்திகள் வெளியாகின.

 பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டதுமே, அமித்ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார்... "நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன்... அதேசமயம் பாஜகவில் சேரவும் மாட்டேன்?" என்று இந்த சந்திப்புக்கு பின் அமரீந்தர் பேட்டி தந்திருந்தார்.. அப்படியானால் தனிக்கட்சி ஒன்று தொடங்கி, பாஜகவுடன் அமரீந்தர் சிங் கூட்டணி வைக்க போகிறாரோ? என்று அடுத்த சந்தேகம் எழும்பியது..

Recommended Video

    எல்லையில் அத்துமீறினால் மீண்டும் Surgical strike. Pakistan-க்கு Amit Shah எச்சரிக்கை|Oneindia tamil
    புதுகட்சி

    புதுகட்சி

    அதுபோலவே, அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என்றும், பல பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அதுமட்டுமல்லாமல், அமரீந்தர் சிங், சில விவசாய சங்கத் தலைவர்களையும் தன்னுடைய புது கட்சியில் இணைக்கவுள்ளதாக கூறப்பட்டது.

     கூட்டணியா?

    கூட்டணியா?

    இப்படிப்பட்ட சூழலில்தான், அமித்ஷாவுடனான சந்திப்புகள் அமரிந்தருக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்றும் 3வது முறையாக டெல்லி சென்று அமித்ஷாவை அமரிந்தர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.. பஞ்சாப்பில் ஏற்கனவே விவசாயிகள் பாஜக மீது கோபமாக உள்ளனர்.. வேளாண் சட்டங்களை திரும்ப பெறாத நிலையில், பாஜகமீது அதிருப்தி அதிகமாகி வருகிறது.. இந்த அதிருப்திகளை போக்க, அமரீந்தருடன் பாஜகவுடன் கை கோர்க்க தயங்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

     சந்திப்பு

    சந்திப்பு

    அமரீந்தருக்கு பஞ்சாப் மாநில விவசாயிகளின் ஆதரவு ஓரளவு உள்ளதால், அதைவைத்து பாஜக புது கூட்டணி கணக்கை வகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இன்றைய தினம் அமித்ஷாவுடனான சந்திப்பு நிகழுமானால், விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்லாமல், கூட்டணி விவகாரம் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்பட உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே ஒருமுறை அமரிந்தர் பேட்டி தந்தபோது ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி காங்கிரஸ் மேலிடத்துக்கு ஷாக் தந்திருந்தார்.

    தேர்தல்

    தேர்தல்

    அந்த பேட்டியில், "பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிடுவது குறித்தும் பரிசீலித்து வருகிறேன்.. தன்னுடைய அடுத்த டெல்லி பயணத்தின்போது கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களை சந்திக்க உள்ளேன்" என்று கூறியிருந்தார்.. அந்த வகையில், 3வதாக அமைய போகும் டெல்லி பயணமானது, அமரிந்தருக்கு எந்த மாதிரியான திருப்பத்தை தரப் போகிறது? அதிருப்தி காங்கிரஸ் சீனியர்களை அமரீந்தர் சரிக்கட்டுவாரா? பாஜகவுடன் கூட்டணி உறுதியாகுமா? அமரீந்தரை வைத்து, பஞ்சாபில் தன்னுடைய சரிந்த செல்வாக்கை பாஜக தூக்கி நிறுத்துமா? என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும்.

    English summary
    Amarinder Singh likely to meet Amit Shah on today in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X