டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரவலால், அமர்நாத் யாத்திரை ரத்து.. நேரலையில் தீபாராதனை ஒளிபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் வழிபாட்டுத் தலத்தை நிர்வகிக்கக்கூடிய வாரியம் இன்று இதை அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமர்நாத் யாத்திரை இந்தமுறையும் ரத்து செய்யப்படுகிறது.

Amarnath Yatra 2020 cancelled, Aarti to be Telecast live

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வருடம் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தது, மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டது.

மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை தேவை - ஹைகோர்ட்டில் மனுமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை தேவை - ஹைகோர்ட்டில் மனு

இந்த அறிவிப்பு காரணமாக இருந்த பதற்ற நிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அமர்நாத் வழிபாட்டுத்தல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களின் மனதை கருத்தில்கொண்டு அமர்நாத் வழிபாட்டு தலத்தில் நடைபெறக்கூடிய ஆரத்தி வழிபாடு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The annual Amarnath Yatra pilgrimage will not be held this year due to the COVID-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X