டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்டு பார்த்த ஒருவர், அதன் சுவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த கருத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டாக்டர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வரட்டி போஸ்ட்டைப் பார்த்து விட்டு பலரும் என்ன கொடுமை சரவணன் இது என்று டென்ஷனாகி மேலும் வைரலாக்கி வருகின்றனர்.

 அமேசான் வரட்டி

அமேசான் வரட்டி

அமேசானில் அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றில் வரட்டியும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருள் பற்றிய விளக்கத்தில், இது 100 சதவீதம் தூய்மையான பசு சாணத்தால் தயாரிக்கப்பட்டது. பூஜை மற்றும் பிற மத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.

 காய வச்ச சாணி உருண்டை!

காய வச்ச சாணி உருண்டை!

முற்றிலும் கையால் தயாரிக்கப்பட்ட இந்த பொருள் காய வைக்கப்பட்டது. ஈரப்பதம் இல்லாதது. காற்றை தூய்மை படுத்தவும், பூச்சிகளை கொள்ளவும் பயன்படுத்தலாம். 5 இன்ச் சுற்றளவு கொண்டது. நீண்ட காலம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதுக்காக இப்படியா

அதுக்காக இப்படியா

இருந்தும், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்களில் ஒருவர், மாட்டு சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் வரட்டியை ரூ.192 க்கு வாங்கி, அதை சாப்பிட்டும் பார்த்துள்ளார். இந்த பொருள் பற்றிய கருத்தை அமேசான் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதன் சுவை மோசமாக உள்ளது.

 வயிற்றுப் போக்கு ஆச்சாம்

வயிற்றுப் போக்கு ஆச்சாம்

புல் மற்றும் மண்ணை சாப்பிடுவது போன்று உள்ளது. இதை சாப்பிட்டதால் எனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதனால் இதனை வாங்குவதற்கு முன் மற்றவர்கள் யோசிக்கவும் என குறிப்பிட்டுள்ளார். இதனை கவனித்த டாக்டர் சஞ்சய் அரோரா என்பவர், இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தான் எங்கள் இந்தியா. ஐ லவ் மை இந்தியா என வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.

 வைரல் பதிவு

வைரல் பதிவு

இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இதனை பகிர்ந்து வருவதுடன். இது உண்மை தானா என கேட்டு கருத்துக்களையும் அனுப்பி வருகிறார்கள். கவ் டங் கேக் ( cow dung cake ) என அமேசான் குறிப்பிட்டிருந்ததால் இது சாப்பிடும் கேக் என தவறாக நினைத்து, அதை வாங்கி சுவைத்தும் பார்த்துள்ளார் போல இந்த மனிதர். அத்துடன் விடாமல் அதன் சுவை எப்படி உள்ளது என கருத்து பதிவிட்டு, மற்றவர்களையும் எச்சரித்துள்ளார். என்ன ஒரு நல்ல மனசு...

English summary
An Amazon customer purchased cow dung cakes and ate them. Moreover, the person also posted his review of it on the website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X